04 அக்டோபர் 2012

மக்கள் பதுங்கிய குழியை அவர்களுக்கே புதைகுழியாக்கிய சிங்களப்படைகள்!

ஒரு சில அதிகாரிகள் அண்மையில் இலங்கை இராணுவத்தினருடன் முள்ளிவாய்க்கால் பகுதியிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டபோது இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித எலும்புக்கூடுகளை வட்டுவாய்க்கால் வடக்கே அமையப்பெற்றுள்ள L வடிவிலான சவக் கிடங்குகளைக் காணக்கூடியதாக உள்ளன என தெரிவித்தனர்.
அவ்விடத்திற்கு இராணுவத்தினைத் தவிர பொதுமக்கள் செல்வது முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விடம் இன்னும் துப்புரவு செய்யப்படாமலும் காட்சியளிக்கின்றது.
மேலும் கண்ணிவெடிகள், தானியங்கித் துபாக்கிகள், RPG ரவைகள் என்பனவும் இப்பகுதியில் பரவலாக காணக்கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கிடங்கின் அருகில் சென்று பார்த்தப்பொழுது அதுவோர் மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது. ஆங்காங்கே மனிதச் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றமையினால் நாம் காலடி வைக்கும் பொழுது கால்கள் இலகுவில் மண்ணுள் புதையுண்டதாகவும் கூறினார். மேலும் சில கிடங்குகளில் இரசாயணக்கலவை இடப்பட்டு மனிதச் சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன அதன் காரணமாக மனித எலும்புகளும் சாம்பல் வடிவிலேய காட்சியளிக்கின்றன எனவும் தெரிவித்தனர்.
2009இல் விடுதலைப் புலிகளுடனான இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதலின் போது மக்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டி தோண்டப்பட்ட ஒரு பாதுகாப்பு கிடங்கினுள் , அத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள், மக்களின் சடலங்களை இராணுவத்தினர் இங்கேயே புதைத்துள்ளனர்.
வட்டுவாய்க்கால் பாலத்தினை மக்கள் கடந்துச் சென்ற சந்தர்பத்தில் மக்களிலிருந்து போராளிகளை பிரித்தெடுத்து அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர் பின்னர் அவர்களின் ஆடைகளை கலைந்து படுக்கொலைச் செய்துள்ளதாகவும் அவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு படுக்கொலைச்செய்யப்பட்டவர்களின் எச்சங்களும் இக்கிடங்கினுள் காணப்பட்டன. இச் சவக் கிடங்கு ஒரு கிலோமீற்றர் நீளமாக காணப்பட்டிருந்தது எனவும் அவ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியில் 21 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் பரவலாக காணப்படுகின்றன என தெரிவித்தனர்.
இலங்கை இராணுவம் தொடர்சியாக மனித படுகொலைகளின் எச்சங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள பொழுதிலும் மனித எலும்புக்கூடுகள் இந்நிலங்களில் பரவலாக காணப்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் ஆனந்தப்புரம் பகுதியிற்கு விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு மனித எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக