08 அக்டோபர் 2012

நீதவான்களும், சட்டத்தரணிகளும் பணிப் புறக்கணிப்பில்!

நீதவான்களும், சட்டத்தரணிகளும் பணிப் புறக்கணிப்பில்நாட்டின் சகல நீதவான்களும், சட்டத்தரணிகளும் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலை கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து சட்டத்தரணிகள் சங்கங்கள் பணிப் புறக்கணிப்பை நாளைய தினமும் தொடரத் தீர்மானித்துள்ளன.
கல்கிஸ்ஸ பகுதியில் வேனில் சென்ற ஆயுததாரிகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். எனினும், இதுவரையில் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, மஞ்சுள திலகரட்ன சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 15ம் வார்டிற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஊடகவியலாளர்கள் மஞ்சுள திலகரட்னவை சந்திக்க அனுமதியளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக