01 பிப்ரவரி 2012

அமெரிக்காவின் தடையால் சிறிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன என மகிந்த தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஈரானுடன் இலங்கை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும், பொருளாதார தடையை ஏற்படுத்தியதன் பின்னர் மாற்று நடவடிக்கைகள் அவசியமாகிறது.
இந்தியாவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மிக விரைவாக ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக