இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராஜதந்திர வரப்பிரசாதம் தொடர்பில் சவால் விடுக்க முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை அரசியலமைப்பின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராஜதந்திர வரப்பிரசாதம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஜனாதிபதி மஹிந்தவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்களை அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்க முடியாது என முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் ராஜதந்திர வரப்பிரசாத கொள்கை தொடர்பில் அந்த நாட்டு காங்கிரஸ் சபை கூட கேள்வி எழுப்பியதில்லை என ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேன்முறையீடு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக