02 பிப்ரவரி 2012

முஸ்லீம்களுக்கு தென்கிழக்கு மாகாணம் வேண்டுமாம்.

13 வது அரசியலமைப்பு மற்றும் புதிய 13 பிளஸ் என்ற அடிப்படையிலான கோரிக்கைகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிப்பெறவேண்டும். அதேவேளை கிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரையில் தென்கிழக்கு மாகாணம் ஒன்றுக்கான அவசியம் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி, இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 பிளஸ் அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை எனறு தெரிவித்தார்.
எனினும் தென்கிழக்கு மாகாணம் ஒன்று அமைக்கப்படும் என்ற நிபற்தனையின் அடிப்படையிலேயே அந்த பேச்சுவார்த்தையின் முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று ஹசன் அலி கூறினார்.
தென்கிழக்கு மாகாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமையவேண்டும்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான கிழக்கு மாகாணத்துக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படும் அதேதருணத்தில் தென்கிழக்கு மாகாணத்துக்கும் காவல்துறை அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று ஹசன் அலி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக