05 பிப்ரவரி 2012

சுயாதீன சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி பான் கீ மூனுக்கு திறந்த மடல்!

இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக சுயாதீன சர்வதேச பொறி முறை ஒன்றினை அமைக்கும்படி இலண்டனில் இயங்கி வரும் சமாதானம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகளுக்கான இலங்கை இயக்கத்தின் தலைவர் எட்வர்ட் மோடைமர் (Edward Mortimer) ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைத்துள்ள திறந்த கடிதமொன்றில் கேட்டுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முகவயிடப்பட்டு கடந்த இரண்டாம் திகதி வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அத்த கைய பொறிமுறையின் அதிகாரங்களில் பின்வரும் மூன்று உடன் நிகழ்வு விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
* குறிக்கப்பட்ட அத்து மீறல்கள் குறித்து உண்மையான புலனாய்வுகள் நடாத்தப்படுகின்றனவா? அதன் கண்டுபிடிப்புகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகத்திற்கு அறிக்கையிடப்படுகின்றதா என்பது உட்பட உள்நாட்டில் இலங்கையரசு பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றதா என்பதைக் கண்காணித்து மதிப்பிடல்.
* அத்து மீறல்கள் குறித்து சுயாதீனமான புலனாய்வுகளை மேற்கொள்ளல்.
* நிபுணர் குழுவினாலும் ஏனைய ஐ.நா.அமைப்புகளினாலும் போரின் இறுதிக் காலப் பகுதியில் பொறுப்புக் கூற வேண்டியவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது உட்பட தகவல்களைச் சேகரித்து எதிர்கால பொருத்தமான நடவடிக்கைகளுக்காகப் பாதுகாத்து வைத்தல்.
அக்கடிதத்தில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி விடயம் தொடர்பாக என்னுடைய 2011 ஜூன் 2ஆம் திகதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
எனது கடிதத்தைத் தொடர்ந்து தாங்கள் அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவருடன் பகிர்ந்து கொண் டீர்கள். இந் நடவடிக்கை எமக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. எனினும் தலைவர் அவ்வறிக்கையினை மனித உரிமைகள் அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பதுடன் மிகச் சிறிய அளவிலேயே அறிக்கையின் சிபாரிசுகள் நடைறைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வருத்தத்தைத் தரக்கூடியதாக உள்ளது. மேலும் அறிக்கை மாத்திரமல்ல அறிக்கையை எழுதியவர்களும் அது ஒரு உத்தியோகபூர்வ ஐ.நா. அறிக்கையல்ல’ என்று தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
இந்த பிழையான அர்த்தங்களை மாற்றுவதற்கு நிபுணர் குழு அறிக்கை தங்களால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் அறிக்கைதானென்பதையும் இது ஐ.நா. நிர்வாக அமைப்பில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கின்றதென்பதையும் இது ஒரு உண்மையான ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான அறிக்கை தான் என்பதையும் பகிரங்கமாக அறிவித்தீர்களானால் இலங்கையில் ஆரோக்கியமான பொறுப்பு கூறல் கலாசாரம் உருவாக முன்னின்று பல வகைகளிலும் செயற்பட்டவர்களைப் பெருமைப்படுத்துவதாக அமையும்.
அறிக்கையின் பந்துரைகள் ஐக்கிய நாடுகள் சபை சம்பந்தப்பட்ட சர்வதேச பொறுப்புக் கூறல் இலங்கை அரசு சம்பந்தப்பட்டவை என இரண்டு பிரிவாகக் காணப்படுகின்றன. இவைகளில் ஒன்றாவது நடைறைப்படுத்தப்படவில்லை.
அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைறைப்படுத்தத் தவறியதானது, 2009 மே 26ஆம் திகதி தாங்களும் ஜனாதிபதி ராஜபக்ஷவும் வெளியிட்ட கூட்டறிக்கையை அப்பட்டமாக மீறுவதாகும். அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த தொராயா ஒபய்ட் (Thoraya Obaid) அப்பணியை கைவிட்டுள்ளதாகத் தெரியவருவது எமக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது. மிக அத்தியாவசியமான இந்த மீளாய்வு குறித்த நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளையும் நேர சூசியையும் அறிந்து கொள்ள நாம் பெரும் ஆவலாயுள்ளோம்.
இந்த உன்னதமான அறிக்கையைத் தயாரிக்க தாங்கள் பணித்ததிலிருந்து இதன் பரிந்துரைகளை எவ்வாறு நடைறைப்படுத்தப் போகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாயிருந்தோம். தண்டனையிலிருந்து தப்பும் மனோபாவத்தை அப்புறப்படுத்தி பொறுப்புக் கூறும் தன்மைக்கு இலங்கையைக் கொண்டு நடத்தும் வகையில் தொடர்ந்தும் தலைமை தாங்கி உண்மை, நியாயம், நிரந்தர நல்லிணக்கம் ஆகியன ஏற்பட உதவுவீர்கள் என நாம் நம்புகின்றோம் என அத்திறந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 133 நாடுகளைச் சேர்ந்த 12000 பிரஜைகள் இது சம்பந்தமாக ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தபோதும் எந்தவித முன்னேற்றம் காணப்படவில்லை என்பதும் தெவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக