06 பிப்ரவரி 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு இழுத்தடிக்கிறது எமது பொறுமைக்கும் எல்லையுண்டு என்கிறார் சிங்கள அமைச்சர்.

தேசிய பிரச்சினை தீர்வு பேச்சுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்காகப் பெயர்களை வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் அது குறித்து பொறுமையாக இருப்பதற்கும் எல்லையுண்டு என்று அரச தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமானால், பிரச்சினைக்கு முடிவு காண அரசாங்கம், சர்வ கட்சிக் குழுவைக் கூட்டும். அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவ் கூறினார்.
அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் தொடருமா? அதன் நிலைமை என்ன ? என்பவை பற்றிக் கேட்டபோதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைத் தரும்வரை கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில்லை என்ற அமைச்சரவைத் தீர்மானத்தை எம்மால் மீற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயர்களைத் தருவதில் கூட்டமைப்பு தொடர்ந்து இழுத்தடிப்பைச் செய்து வருகிறது. பெயர்களைத் தருவதற்கான எந்த அக்கறையும் அவர்களிடத்தில் இல்லையென்றே கருதுகிறோம்.
எனவே, தீர்வு முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி அறிவித்தபடி சர்வகட்சிகள் விரைவில் கூடும். அதற்கான திகதி அறிவிப்பும் வெளிவரும். கூட்டமைப்பு சாதகமான பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமில்லை என்று சஜின் வாஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக