பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களை சுமத்தும் புதிய காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான வகையில் இந்த காணொளி அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணொளியை வெளியிடுவதற்கு முன்னர் ஊடக நிறுவனத்தின் தயாரிப்பாளர் மெரன் ஸ்வோன் ஜெனீவா சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்iயை ரகசியமாக சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வுகள் நடைபெறவுள்ள தினத்தில் செனல் 4 ஊடகத்தின் காணொளி வெளியிடுமாறு உலகத் தழிழர் பேரவை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை சபை அமர்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் செனல்4 ஊடகத்தின் முதல் காணொளி வெளியிடப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக