03 பிப்ரவரி 2012

அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசே நிராகரிக்க முடியுமா?

சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி உதவும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயெல்ல இன்று கூறினார். எனினும் சுயாதீனமான சட்டமா அதிபர் திணைக்களம், சுயாதீன நீதிச்சேவை, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை அரசாங்கம் இயன்றவரை விரைவாக ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த அரசாங்கம் அதை இப்போது வசதியாக மறந்துவிட்டது எனவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவது சிறந்தது எனக் கூறி தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தது எனவும் அரசாங்கத்தின் இன்றைய நிலைப்பாடு நம்ப முடியாததாகவுள்ளது எனவும் அவர் கூறினார். அரசாங்கம், தானே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எப்படி நிராகரிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பிக்கவுள்ள மனித உரிமைககள் செயற்திட்டம் இலங்கைக்கு சாதகமான பெறுபேற்றை கொண்டுவராது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக