31 ஆகஸ்ட் 2012

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் திருச்சி வேலுச்சாமி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.
பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த ரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்டடுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவியாளராகவும் இருந்து வந்தவர் திருச்சி வேலுச்சாமி. மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர். இது அவருக்கு அரசியலில் பெரும் பலம் சேர்த்தது. அதுவே பலவீனமாகவும் ஆகிப்போனது.
சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என பண்முகம் கொண்ட அவர் விடுதலைப்புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி, புதிய பார்வை ஆசிரியர் (சசிகலா) நடராஜன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் நல்ல நெருக்கம் கொண்டவர்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று அப்போது தகவல் பரவியபோது, அதை மறுத்து மாற்றுக் கருத்து வெளியிட்டவர் திருச்சி வேலுச்சாமி. இதனால் அவரை பலரும் உற்று நோக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணி பற்றி முழு விவரப் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள்.

தமிழீழ விழுதலைக்காக இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை நாட்டுப்பற்றாளர் எனக் கௌரவப்படுத்துவதில் பெருமையடைகின்றோம்.

தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை ’நாட்டுப்பற்றாளர்’ எனக் கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கிறது என சுகவீனம் காரணமாக சாவடைந்த நல்லதம்பி ஐயாவை நாட்டுப்பற்றாளராக கௌரவப்படுத்தி விடுத்துள்ள அறிக்கையில்தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை வருமாறு:
நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா
தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு ’சுயமரியாதைக் கழகம்’ என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்து வந்தவர். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் வீறு கொண்டெழுந்தபோது 1984 ஆம் ஆண்டிலிருந்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று பயணித்தார்.
இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வுமிக்க மூத்த மகனை ஒட்டுக்குழுக்களின் துப்பாக்கிக்குப் பலிகொடுத்த நிலையில் இந்தியப்படை நல்லதம்பி ஐயாவைக் கைதுசெய்து சிறை வைத்திருந்தது. இவரின் இன்னொரு மகன் கப்டன். ரதீஷ் 24 . 10 .1987 அன்று களத்தில் வீரச்சாவடைந்தார்.
தேசியத்தலைவரால் அறியப்பட்டிருந்த தீவிர ஆதரவாளர்களுள் நல்லதம்பி ஐயாவும் ஒருவர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட ஆரம்பகாலப் போராளிகளுள் இவரை அறியாத நிலையில் எவரும் இருந்ததில்லை எனுமளவுக்கு போராட்டத்தோடு ஒன்றித்திருந்தவர் நல்லதம்பி ஐயா. தென்தமிழீழத்தில் எமது இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிக்கு நல்லதம்பி ஐயாவின் பங்களிப்பு அளப்பரியது.
எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நல்லதம்பி ஐயாவின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை. எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் நல்லதம்பி ஐயாவும் இணைந்துகொள்கிறார். தான் நேசித்த தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தனது மனைவியோடு விடுதலைப் புலிகளுடனேயே பயணித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தார். தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை ’நாட்டுப்பற்றாளர்’ எனக் கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கிறது.
அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

30 ஆகஸ்ட் 2012

காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களின் துன்பங்களே முன்னிலை வகிக்க வேண்டும்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை ஒட்டி நாளை வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ள போவதில்லை என மக்கள் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
சர்வதேச காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் மக்கள் கண்காணிப்பு குழு கலந்து கொள்ளபோவதில்லை என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம்.கொழும்பில் என்னுடன் சக இணைத்தலைவர் நிமால்கா பெர்னாண்டோ, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், செயலாளர் பி. ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்ட எமது நிர்வாக குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எமது முடிவிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமது இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
வவுனியா நிகழ்வுகள் முழுக்கவும் அரசு சார்பற்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளாக நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இனவாத அரசியல் நோக்கங்களுக்காக கடத்தப்பட்ட பெருந்தொகையான தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக அரசாங்கத்திற்கு கடுமையான செய்தி ஒன்றை இந்த கால கட்டத்தில் விடுப்பதற்கு இந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அரசுக்கு எதிரான அரசியல் கட்சி தலைவர்களை காணாமல் போனோர்களின் போராட்டத்தில் முழுமையாக இணைத்து கொள்ள கூடாது என்றும், குறிப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் அரசு சார்பற்ற நிறுவனங்களை சார்ந்த ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் கட்சிகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்து வருவதையும் நாம் நிராகரிக்கின்றோம்.
அத்துடன் யுத்தத்தின்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு காணாமல் போனதாக அறிவிக்கப்பட இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களையும், காணாமல் போன தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஒரே அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன்னிறுத்துவதையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் போன படை வீரர்களது குடும்பத்தவர்களின் துன்பங்களையும் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், படைவீரர்களின் குடும்பங்களுக்கு அரசு பல்வேறு ஒத்தாசைகளை வழங்கி பக்க பலமாக இருக்கின்றது.
யுத்தத்தின் போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரணமடைந்த படை வீரர்களை இன்னமும் காணாமல் போனவர்களாக காட்டுவதற்கு அரசு முயற்சிக்கிறது. அவர்களையும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ப்பது அரசின் நோக்கங்களுக்கு சாதகமானது. இன்றைய உலக சூழலில் இரண்டு தரப்பினரையும் ஒன்று சேர்த்து, இலங்கையில் எல்லா இனத்தவர்களும் காணாமல் போயுள்ளார்கள் என்று உலகத்துக்கு சொல்லி, தமிழர்களின் பெருந்துயரை மூடிமறைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி கொடுப்பதற்கு நாம் தயாரில்லை.
எனவே, இன்றைய காலகட்டத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களின் துன்பங்களே முன்னிலை வகிக்க வேண்டும் என்பது எமது கொள்கையாகும். சொல்லொணா கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் துன்பங்களை மூடிமறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் ஆதரிக்க முடியாது.
நாளை வவுனியாவில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் உள்நோக்கங்கள் தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வுகளை வெறும் அரசு சார்பற்ற நிறுவன நிகழ்வுகளாகவே நாம் கருதுகிறோம். எனவே தெளிவான அரசியல் நோக்கங்கள் இல்லாமல், அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொள்ள மாட்டோம்.

29 ஆகஸ்ட் 2012

மாங்குளத்தில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!

மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார்.
இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர்.
இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர்களின் வீட்டுக்கு சிறிலங்கா படையினர் வந்து போவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த மாதம் சிறுமியின் பாதுகாவலரான பெண் வெளியில் சென்றிருந்த போது, அருகில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 53-2 பிரிகேட் முகாமைச் சேர்ந்த படைச்சிப்பாய் ஒருவர், அந்த வீட்டுக்குச் சென்று சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இதற்கு சிறுமியின் பாதுகாவலரான பெண்ணின் மகளும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா படைச் சிப்பாயினால் பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக இதுபற்றி எவரிடமும் கூறவில்லை.
எனினும் இந்தச் சம்பவத்தினால் உளநலன் பாதிப்புற்ற நிலையில் இருந்த சிறுமியை, அவதானித்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்த போதே இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கை அரசின் இனவெறிப்போக்கைத் தடுத்து நிறுத்தக் கோருகிறார் விஜயகாந்த்!

உலக அரங்கில் இலங்கை அரசின் இனவெறி போக்கு தமிழர் நெஞ்சங்களில் எரியும் ஈட்டியென பாய்ந்துள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் சிங்கள அரசின் இராணுவப் பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த போக்கை தடுத்து நிறுத்த இந்திய அரசு அக்கறை காட்டாது தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.
இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பதை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜூலை மாதம் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இலங்கை விமானப்படையினருக்கு இந்திய அரசு பயிற்சி அளித்து வந்தது.
இலங்கை படைக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 27ஆம் திகதியன்று குன்னூரில் உள்ள இராணுவ பயிற்சி முகாம் முன்பு தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது எமது தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பணயம் வைத்து இலங்கை அரசோடு இந்திய அரசு ஒரு தலை நட்பு கொள்ளத் துடிப்பது ஏன் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை.
சிங்கள இனவெறி அரசின் இந்த துரோக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி வழங்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்- என்றுள்ளது.

28 ஆகஸ்ட் 2012

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக வாதிட வைக்கோவிற்கு அனுமதி!

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மத்திய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வாதாட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு புதுடெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் கடந்த 18-ந் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குறித்த இவ் விசாரணையில் தம்மையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு வை.கோ மன்றிடம் கோரினார்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. அப்போது வைகோ, தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகளைச் சுட்டிக் காட்டியே இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான், விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், அனுதாபி. கடந்த தீர்ப்பாயத்திலேயே, எங்கள் இயக்கமான ம.தி.மு.க.வை, மத்திய அரசு, தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது. புலிகளை ஆதரித்தேன் என்பதற்காக என் மீது வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளது. எனவே, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவும், இந்த விசாரணையில் நான் பங்கேற்கவும் அனுமதிக்க வேண்டும் என வை.கோ குறிப்பிட்டார்.
அதற்கு வழக்கை விசாரித்த நீதிபதி வி.கே.ஜெயின், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் தீர்ப்பாய விசாரணையிலும், புலிகள் மீதான தடை குறித்து, வைகோ தன் வாதங்களை முன்வைக்கலாம் ஆணை பிறப்பித்தார்.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு, சென்னையில் அடுத்த மாதம் 28, 29-ந் திகதி ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் வை.கோ விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வாதிடவுள்ளார்.

ஏழு ஈழத் தமிழர்கள் விடுதலை - செந்தூரனின் உண்ணாவிரத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றி!

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் செந்தூரன் செய்த உண்ணா நிலை போராட்டம் , நாம் தமிழர் , மதிமுக செய்த முற்றுகை போராட்டம் , நாம் அரசுக்கு கொடுத்த அழுந்தங்கள் , ஊடகங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள தோழர்கள் ஏழு பேர்களை அரசு விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு.. சேகர், சதீஸ்குமார், சிவா , பிசி முகமது , குட்டி, பராபரன் மற்றும் ஒரு வயோதிகர் சண்முக நாதன் ஆகியவர்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மேலும் நான்கு தமிழர்கள் அருள் குலசிங்கம், செல்வராஜ் , சதாசிவம் மற்றும் வேந்தன் ஆகியோர் தங்கள் பட்டினிப் போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். எனினும் நிரந்தர தீர்வு எட்டும் வரை செந்தூரனின் போராட்டம் தொடரும் என செந்தூரன் அறிவித்துள்ளார்.

27 ஆகஸ்ட் 2012

கோமாவிலுள்ள தமிழ் அரசியல் கைதியை கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றுக!

காலி சிறையிலிருந்து, காலி கராபிட்டிய மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஷ்குமாரை கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மகசின் சிறைசாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சதீஷ்குமார், வலது காது பகுதியில் கட்டு போடப்பட்ட நிலையில், காலியில் உள்ள இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கீழே விழுந்ததால் இந்த காயம் ஏற்பட்டதாக, நேற்று அவரை சென்று பார்வையிட்ட கைதியின் மனைவியிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக, கைதியின் மனைவி தன்னிடம் தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்தார்.
அதனையடுத்து, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவை இன்று தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு, அரசியல் கைதி சதீஷ்குமாரை உடனடியாக காலி கராபிட்டிய மருத்துவமனையிலிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டுவர ஆவன செய்யும்படி தான் கூறியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
கொல்லப்பட்ட தமிழ் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்‌ஷன் ஆகியாரை அடுத்து தற்போது சதீஷ்குமாருக்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலை, தமிழ் அரசியல் கைதிகளை பரிதாப நிலைமையினை படம் பிடித்து காட்டுகின்றது.
கொழும்பிலிருந்து நல்ல நிலைமையில் வழக்கு விசாரணைக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்ட இந்த கைதி, எவ்விதம் சுயநினைவற்ற நிலைமையில் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி குழப்ப நிலை நிலவுகின்றது. அவரது வழக்கை முன்னெடுக்கும் சட்ட மற்றும் மனிதவுரிமை நிறுவனத்திற்கும் நான் இதுபற்றி அறிவித்துள்ளேன்.
கொடிகாமத்தை பிறப்பிடமாக கொண்ட சதீஷ்குமாரின் மனைவி வவுனியாவை சேந்தவர். மக்கள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் கவனத்திற்கு, கைதியின் மனைவி இது தொடர்பில் தகவல்களை அறிவித்த நிலையிலேயே, இந்த விடயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாம் எதிர்நோக்கி உள்ளோம். என்றார்.

சீன உதவியில் இராணுவக் குடியிருப்புகள் – அமெரிக்கா, இந்தியாவிடம் முறையிடப் போகிறது கூட்டமைப்பு!

சிறிலங்காவின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் சீனாவின் உதவியுடன் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்ற போதிலும், இதுகுறித்து இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் கரிசனை கொள்ளாதிருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு,கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,
“சீனாவின் உதவியுடன் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது பற்றிய நம்பகமான செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன.
பல இடங்களில் சீன உதயுடனான இராணுவக் குடியிருப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன.
திருமுறிகண்டிப் பகுதியில் சீனா வழங்கிய உடனடியாக அமைக்கக் கூடிய வீடுகள் பல சிறிலங்கா இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்டுள்ளன.
முள்ளிக்குளம் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்களில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா கடற்படையினருக்கு தளம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் கவனத்தில் எடுக்காதது கவலையளிக்கிறது.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளில் சிறிலங்கா படையினர் நிலையாகத் தளம் அமைத்து தங்கியிருப்பதை ஏற்க முடியாது.
சிங்கள மக்களுக்கு சீனா உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.
தமிழர் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதே கண்டனத்துக்குரியது.
சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா வழங்க முன்வந்துள்ள நிதியுதவி குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.” என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

26 ஆகஸ்ட் 2012

சிறப்பு முகாம் முற்றுகை செந்தமிழன் சீமான் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது!

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உபூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே அவரை சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு அதிகாரிகள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் செந்தூரன் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர் சுமார் 2000 நாம் தமிழர்கள்.பெருமளவில் பெண்கள் இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கில் திரண்ட நாம் தமிழர்களால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நிலையை சமாளிக்க காவல்துறை அனைவரையும் கைது செய்தது.சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கைது செய்யப்பட்டு செந்நீர் குப்பம் முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி மதிமுக கட்சியினர் பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து கைதானார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இருந்தும் தமிழக அரசு ஏனோ இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருகிறது.

அரசாங்கத்தின் கனவுகளை கிழக்குத் தேர்தல் பேரிடியாக்கும்; சுரேஷ்

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வை முன்வைத்தே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கலைத்து தேர்தலை சந்திக்கின்றது.என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் அந்த எண்ணத்திற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வில் காட்டுவதற்கான காய் நகர்த்தலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பேரிடியாக இருக்கும்.அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களால் மிக மோசமாகத் தோற்கடிக்கப்படும். எனக் குறிப்பிட்டார்.
இதை உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்க உறுதி பூண்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களில் 85 சதவீதமானோர் வாக்களித்தால் கிழக்கு மாகாணத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.எனவே எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டுமெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

25 ஆகஸ்ட் 2012

தேசியத்தலைவர் பயன்படுத்திய ஜீப்பென சிங்களவர்களை ஏமாற்றும் சிங்களப்படைகள்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக சிங்கள மக்களை ஏமாற்ற ஜீப் ஒன்றின் புகைப்படங்களை இலங்கையின் அரச படையினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஜீப் நவீன தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக படையினர் கூறுகின்றனர். அந்த படங்களில் இருந்து சில காட்சிகள்.

கனகராயன் குளத்திலும் குடியேறினார் புத்தர்!

கனகராயன்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த வழிபாட்டு இடம் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் தளபதி பிரிகேடியர் ரணவக்கவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த வழிபாட்டு இடத்தில் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்பறமாக போதி மரம் (அரசு) ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
சிறி சம்புத்தரஜ விகாரை என்ற பெயரில் இங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்முதற்கட்டமாகவே புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு அறை மற்றும் போதி மரத்துக்கு அமைக்கப்பட்ட வேலி ஆகியன கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
வடமத்திய மாகாண பிரதி சங்க நாயக்கர் வண எட்டம்பகஸ்கட கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், வன்னிப் படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எஸ்.பெரேரா ஆகியோர் இந்த வழிபாட்டு அறை மற்றும் போதி மர வேலி ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.

எமது உரிமையைப் பெற இந்த அரசு தந்துள்ள சந்தர்ப்பம்தான் கிழக்குத் தேர்தல்.

கிழக்கு மாகாணத் தேர்தலை எமக்கு திணித்துள்ள போதிலும் அதனையே பயன்படுத்தி தமிழ் தேசியத்தையும், எமது உரிமையையும், இணைந்த வடக்கு, கிழக்கினையும், சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள்தாக அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ் மக்களாகிய நாம் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எமக்கு உள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை கல்முனையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்களின் உரிமையை, சுதந்திரத்தை கோருகின்ற ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதன் மூலமே அதனை உறுதிபடுத்த முடியும். இது எமக்கான கடைசி சந்தர்ப்பம். எமக்கு பக்க பலமாக புலம் பெயர்ந்த எமது உறவுகள் உள்ளன.
நீங்கள் நேர்மையாகவும், தமிழ் தேசியப் பற்றுடனும், எமது கொள்கைகளில் இருந்து மாறுபடாமலும், எமக்காக வித்தாகிய எமது மாவீரர்களை மனதில் நிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும். எமக்கு உரிமை வேண்டும், எமது தேசியம் வேண்டும், எங்களது காணி எமக்கு வேண்டும், எம்மை நாமே ஆள வேண்டும். எமது நியாயமான போராட்டத்தின் வெற்றி, வெகு தொலைவில் இல்லை. என்றார்.

24 ஆகஸ்ட் 2012

துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடும், டெசோவும் - நெடுமாறன் பதிலடி!

எனது குற்றச்சாட்டுக்கு பதில் அறிக்கை விடுவதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே கருணாநிதி வெளியிட்டுக் கொண்டிருப்பதாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரான கருணாநிதி, அதில் அடியோடு தவறினார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும்.
அதற்குரிய சரியான பதிலை வழங்காமல் மாறாக மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே கலைஞர் வெளியிட்ட வண்ணம் உள்ளார். என நெடுமாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக, முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது டொசோ மாநாடும் கலைஞர் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள நெடுமாறன்,
இந்த இரு மாநாடுகளும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது எனக் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் எதிர்ப்பை நிராகரித்தது பிரித்தானியா!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை பிரித்தானியா மீண்டும் புதுப்பித்துள்ளது.
ஆனால், சிறிலங்கா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கோரியிருந்த போதிலும் – பிரித்தானியா அதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
புதுப்பிக்கப்பட்ட இந்த பயண எச்சரிக்கை அறிவிப்பை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நேற்று வெளியிட்டது.
புத்தர்சிலைகளின் ஒளிப்படங்களின் முகப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பயண எச்சரிக்கை குறிப்பில் உள்ளூர் சட்டங்கள், சுங்கப் பிரிவு குறித்த மேலதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் ஒட்டுமொத்த பயண எச்சரிக்கை அறிவுரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 14ம் நாள் வெளியிடப்பட்ட பயண எச்சரிக்கைக் குறிப்பில், சிறிலங்காவில் தேசியவாத எழுச்சி நிலவுவதாலும், மேற்குலக எதிர்ப்பு தீவிரமாக உள்ளதாலும், பாலியல் குற்றங்கள் அதிகளவில் இடம்பெறுவதாலும் அங்கு செல்லும் பிரித்தானிய குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துகளை நீக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவிடம் கோரியிருந்தது.
எனினும் சிறிலங்கா அரசின் அந்த எதிர்ப்பை கருத்தில் எடுக்காத பிரித்தானியா, பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈழ யுத்தத்துக்கு நெடுமாறன் அனுப்பிய கடற்படையை நான் தடுத்தேனா?

“இலங்கையில் யுத்தம் நடந்தபோது, அதை தடுக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை” என்று பொருள்பட நெடுமாறன் தெரிவித்த கருத்துக்கு, அறிக்கையில் பதில் கொடுத்திருக்கிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. “நெடுமாறன் ஏன் கைபிசைகிறார்? அவர் அனுப்பிய கடற்படை போருக்கு போவதற்குமுன் யுத்தம் முடிந்து விட்டது என்றா?” என்பது அவரது கேள்வி.
“நெடுமாறன் ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையில் சிங்கள ராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்று குற்றஞ்சாட்டி, நக்கலும் நையாண்டியுமாக கூறி வருகிறார். இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்ஷே போர் தொடுத்து விட்டார் என்றதும், இவர் என்ன செய்தாராம்?
நெடுமாறன் தன்னுடைய கப்பல் படையை கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப் படை இலங்கைப் போய்ச் சேருவதற்குள் நான் தடுத்து நிறுத்தி விட்டது போலம், அதற்குள் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போலவும் பாவம்… நெடுமாறன் கைபிசைந்து கொண்டு, நம்மையும் தாறுமாறாகவும், தரக் குறைவாகவும் தாக்குகிறார்“என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, இதுபோன்ற பிரச்னைகளில் ஒரு மாநில அரசு என்னதான் செய்ய முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும். ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எரிச்சலைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு புரியாது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் மோதல் நடந்தபோது, நெடுமாறன் கூற்றுப்படி நானாவது வாய் திறக்காமல் சும்மாயிருந்தேன் என்பது உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால் தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினாரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா..!
நெடுமாறனுக்கு அது நினைவிலே இருக்கிறதா?
அதுமாத்திரமல்ல; இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், “போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று சொன்னாரே ஜெயலலிதா..!
அதாவது நெடுமாறனுக்கு ஞாபகம் இருக்கிறதா?
நடந்தது என்ன என்பதை, உள்ளமென ஒன்று இருப்போர் அறிவர். உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருப்போருக்கு அது தெரிவதற்கு நியாயமில்லை” என்று தமது அறிக்கையில் காரசாரமாக குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
ஈழ யுத்தத்துக்கு கடற்படை அனுப்பிய கிண்டலுக்கு, நெடுமாறன் தரப்பில் இருந்து பதில் வரும் என எதிர்பார்க்கலாம்.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை 2012, ஆகத்து மாதம் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் நடத்துகின்றன. அயல்நாடுகளில் தமிழ் கற்றல் கற்பித்தலில் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகின்றது.
இடம்: கருத்தரங்கக்கூடம், எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), சென்னை.
நாள்: 25,26-08.2012(சனி,ஞாயிறு)
நேரம்: காலை 10 மணி முதல்
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் என்ற தமிழ் அமைப்பு கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி நோக்கி உலக அளவில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. இந்த அமைப்பும், 65 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வரும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை நடத்துகின்றன.
இந்த மாநாட்டில் தொடக்கவிழா, மலர் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், நிறைவு விழா நடைபெற உள்ளன.
உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலட்சுமணன் அவர்களும், மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ஔவை.நடராசன் அவர்களும், முனைவர் பொற்கோ அவர்களும், முனைவர் க.ப.அறவாணன் அவர்களும், முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களும், துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களும், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா, சிவஞானம் சிரீதரன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
திரு-திருமதி மிக்கி செட்டி (தென்னாப்பிரிக்கா), வி.சு.துரை ராசா(கனடா), வேல். வேலுப்பிள்ளை (அமெரிக்கா), துரை. கணேசலிங்கம் (செர்மனி) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.சு.துரைராசா(கனடா), உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஆகியோர் செய்துள்ளனர்.

23 ஆகஸ்ட் 2012

மஹிந்தவிற்கு பதவி வழங்கும் போது மூவரே ஆதரித்தனர் - சந்திரிகா!

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 59 பேரில் மூன்று பேர் மட்டுமே இணக்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.
இவ்வாறு அதிரடிக்கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க.
இணையத்தளமொன்றுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் கூடுதல்பட்ச அதிகாரங்கள் இருந்தாலும் அந்த அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கவில்லை.
அந்த அதிகாரங்களுக்காக நான் சண்டையிடவுமில்லை. பிரபல்யமாகத் திகழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஒரு கட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்பத்தினரோ அழித்து விட இடமளிக்கமுடியாது. அவர்கள் இப்போது அதைச் செய்துகொண்டிருந்தாலும் கட்சியால் மீள எழும்ப முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
2005ஆம் ஆண்டு எமது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தேடியபோது சிரேஷ்ட உறுப்பினர்கள் 61 பேரில் நானும் மஹிந்தவும் தவிர, மிகுதி 59 பேரில் மூன்று பேர் மட்டுமே அவருக்கு வேட்பாளர் பதவியைக் கொடுக்கலாமென்று கூறினர். மற்றவர்கள் அனைவரும் வேண்டாமென்றே கூறினர். இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
குறைந்தபட்சம் எமது சகோதரர் அநுர கூட இந்தப் பதவியைக் கேட்கவில்லை. எனது சகோதரியுடன் என்னை சந்திக்க வந்த அநுர, இந்த தலைமைப்பதவி தமக்கு வேண்டாமென்றும், இதனை மஹிந்தவுக்கே வழங்குமாறும் என்னிடம் கூறினார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி.

தமிழகத்திற்கு மருமகளாக வந்திருக்கும் வவுனியா விமலினியின் சோகம்!

இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.
தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமலினி. ஆகஸ்ட் 25-ம் தேதி இவருக்கும் பாலகுருவின் மூத்த மகனான பாண்டியனுக்கும் சென்னையில் திருமணம்!
2009-ம் ஆண்டு. இலங்கையில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்தபோது முள்ளிவாய்க்கால் அருகே வட்டுவாகலில் பங்கர் ஒன்றில் பதுங்கியிருந்த விமலினியின் குடும்பத்தை பங்கரைத் துளைத்துக்கொண்டு வெடித்த குண்டொன்று சின்னாபின்னமாக்கியது.
விமலினியின் தாய் சரோஜாமலர், தந்தை இருதயராஜ் அங்கேயே இறந்துவிட... தங்கை சரோஜினி, தம்பிகள் சதீவகாந்த், ஜீவகாந்த் ஆகியோருடன் உயிர் பிழைத்தார் விமலினி. விமலினிக்குத் தலை, நெஞ்சு, இடுப்பு, கால் பகுதியில் கூரிய உலோகங்கள் துளைத்து இருந்தன.
"எங்களை இலங்கை இராணுவம் பம்பைமடு முகாமில் கொண்டுவந்து வைத்திருந்தது. என் அண்ணன் கமலகாந்த் புலி போராளி என்பதால், மற்றவர்களைவிட எங்களுக்குச் சித்திரவதைகள் அதிகம். அந்த முகாமில் வைத்துதான் மாமாவை (பாலகுரு) முதல்முறையாகப் பார்த்தேன்.
அவர் தமிழகத்தில் இருந்து ஆறுதல் சொல்ல வந்திருந்தார். எங்களுக்கு ஆறுதல் கூறியவர், மறுநாள் என்னிடம் வந்து, தமிழ்நாட்டு மருமகளாக வரச் சம்மதமா? என் மகனைத் திருமணம் செய்துகொள்கிறாயா?' என்று கேட்டார். பதில் சொல்லும் சூழலில் நான் அப்போது இல்லை.
அப்போது என் பின்னங்காலில் நுழைந்த குண்டின் பாகங்களை அகற்றி சதையை வெட்டி எடுத்து இருந்தார்கள். எதிர்காலத்தில் என்னால் நடக்க இயலுமா என்று கூடத் தெரியாமல் இருந்தேன்.
சிகிச்சை அளித்த செவிலியர்களோ தலையிலும் நெஞ்சிலும் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றும் வசதி அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நான் உயிரோடு இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியாது.
அந்தச் சூழலில் மாமா இப்படிக் கேட்டால், என்ன பதில் சொல்லுவேன்? நானும் சென்றுவிட்டால் என் தம்பிகளையும் தங்கையையும் யார் பார்த்துக்கொள்வார்கள்?
அதனால் மாமாவிடம் நான் மறுக்கவும் இல்லை, சம்மதிக்கவும் இல்லை. மாமா கிளம்பிச் சென்றுவிட்டார். என் தம்பிகளும் தங்கையும், ஏன் அக்கா, பேசாமல் சென்னை சென்று இருக்கலாம் அல்லவா?
அங்குதான் சண்டை இல்லை; சித்திரவதை இல்லை; யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். தினமும் நிம்மதியாகக் குளிக்கலாம். உணவு உண்ணலாம்...� என்று சொன்னார்கள். கண்ணீரைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை.
இடையில் ஓர் ஆண்டு ஓடிவிட்டது. அதற்குள் நாங்கள் முகாமில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இராணுவத்தினர் தலையில் முகமூடி அணிவித்த ஆட்களை அடிக்கடி அழைத்து வருவார்கள்.
எங்களில் கொஞ்சம் களையாக இருக்கும் பெண்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களிடம் அடையாள அணிவகுப்பு நடத்துவார்கள். முகமூடி நபர், தலையை 'ஆம்' என்று ஆட்டினால் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அவள் அவ்வளவுதான். இப்படிச் சென்ற யாரும் திரும்பி வந்ததே இல்லை. நமக்கும் இப்படி ஒருநாள் நடக்கும் என்றுதான் நினைத்து இருந்தேன். அங்கு விடியும் ஒவ்வொரு விடியலும் எமக்குச் சொந்தம் இல்லை.
இராணுவத்தினர் சொல்லும் நேரத்தில்தான் குளிக்க வேண்டும். 20, 30 பேராகச் சேர்ந்து குளிக்க வேண்டும். சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து மூடி இருந்தாலும் மேலே திறந்தவெளியாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் உயரமான பகுதியில் இருந்து நாங்கள் குளிப்பதைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கதைத்துக் கொண்டும்தான் இருப்பார்கள். சிறு கற்களை எங்கள் மீது எறிவார்கள். நாங்கள் சோப்பு போட்ட பின்பு பாதியில் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
2011-ல் மாமா மீண்டும் வந்து என்னிடம் அதே கேள்வியைக் கேட்டார். தம்பிகளும் தங்கையும் என்னிடம், அக்கா போய்விடு அக்கா. சென்னை நல்ல ஊர். நம் மக்கள் அவர்கள். நம் சகோதர, சகோதரிகள். உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்' என்று அன்று இரவு முழுவதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் மாமா வந்தபோது தம்பிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். தங்கையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. அவளுக்குப் பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தால் வருகிறேன் என்றேன்.
தாராளமாகச் செய்கிறேன் என்றார். அதன் பின்பே திருமணத்துக்குச் சம்மதித்தேன். விடயம் தெரிந்தால் அவ்வளவுதான். இராணுவத்தினர் சும்மா விட மாட்டார்கள். அதனால், இரகசியமாக வைத்து இருந்தோம். ஒரு ஆண்டாக முகாமில் இருந்து என்னை அழைத்துச் செல்ல ஏதேதோ காரணங்களைச் சொல்லியும் இலங்கை அரசு விசா கொடுக்கவில்லை. மாமா ஏதேதோ முயற்சிகள் எடுத்து ஜூலை மாதம் எனக்கு சுற்றுலா விசா வாங்கினார்.
ஜூலை 15-ம் தேதி அத்தான் வந்து என்னை அழைத்து வந்தார். கிளம்பும்போதுகூட மனம் இல்லை. இந்த மண்ணுக்காகத்தானே அத்தனை பேரும் போராடினார்கள்! பல ஆயிரம் பேர் உயிர் கொடுத்தார்கள். இந்த மண்ணைவிட்டுக் கிளம்பி வருகிறோமே என்று வருத்தமாக இருந்தது.
சென்னைக்கு இப்போதுதான் முதல்முறையாக வந்து இருக்கிறேன். இங்கு இருக்கும் சூழலே அமைதியாக இருக்கிறது. அத்தான் என்னை மெரினா பீச்சுக்கு அழைத்துப்போனார்.
மகாபலிபுரம் கூட்டிச் சென்று சிற்பங்களைக் காட்டினார். ஊரை எல்லாம் சுற்றிக் காட்டினார்.
இந்த ஊரில் நீங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக... எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறீர்கள்? எங்கள் ஊரில் மட்டும் ஏன் அப்படி?
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்?என்று அத்தானிடம் கேட்டேன்.அத்தானிடம் பதில் இல்லை!

(பதிப்பு-ஆனந்த விகடன்)

22 ஆகஸ்ட் 2012

தலைவரின் பெயரில் பழச்சாற்றுக்கடை!

தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினத்தில் தலைவரின் பெயரில் பழச்சாறுக்கடை.
எங்கள் தமிழீழ ஆதரவு எங்கள் உணர்வோடு கலந்த ஒன்று….
நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் ….
எந்த சட்டமும் , தண்டனையும் எங்களின் இன உணர்வை துளி அளவு கூட குறைத்து விட முடியாது….
பழ வியாபாரி …நாகப்பட்டினம்….

ஒபாமாவின் ஆலோசகர் இந்தியா அவசர பயணம்! அதிர்ச்சியில் இலங்கை!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருமாகிய சூசன் ரைஸ் அவசர பயண மொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார்.
பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பிலான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா வரும் சூசன் ரைஸ் புது டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது அதன் பின்னணியில் இருந்து காய்களை நகர்த்திய சூசன் ரைஸ், இப்போது பிராந்திய பாதுகாப்பு என்ற ரீதியில் அவசரமாக டில்லி வருவது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து சமுத்திர பிராந்தி யத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுத்துவருவதாக இந்தியா தொடர்ச்சியாகக் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் சூசன்ரைஸின் இந்த பயணம் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் அடுத்த அமர்வு செப்ரெம்பரில் நடைபெறவுள்ள நிலையில் சூசன் ரைஸ் திடீரென இந்தியாவுக்கு வருகை தருவது இலங்கைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மனித உரிமைகள் சபையில் கடந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை அது சரியான வகையில் பயன்படுத்தியுள்ளதா என்பதை இந்த இந்திய வருகையின் போது சூசன் ரைஸ் கேட்டறிந்து கொள்வார் எனவும் ஊகிக்கப்படுகிறது.

21 ஆகஸ்ட் 2012

அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்ட சம்பந்தனுடன் கூட்டுச்சேரத்தயார் இல்லை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழரசுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பம் தெவித்திருப்பதாகவும் இது தொடர்பிலான தொடர் சந்திப்பு இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்குத் தேர்தல் களத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு தகவல் வெளியிட்ட கஜேந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மருதநாயகம் தமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் கலாசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன் வதந்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். குறித்த சம்பவத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதேபோல தமிழரசுகட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைக் கொள்கைகளையே கைவிட்ட தமிழரசுக்கட்சியினருடனும் அதன் தலைவருடனும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டுச் சேரத் தயார் இல்லை என்றும் தெரிவித்த கஜேந்திரன் கிழக்குத் தேர்தல் களத்தில் வெற்றிவாய்ப்பை நோக்காகக் கொண்டே தமது கட்சி தொடர்பிலான வதந்தியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" - கொரட்டூரில் சீமான் முழக்கம்!

"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,

20 ஆகஸ்ட் 2012

மழுப்பிய ராஜாவும்; பூசி மெழுகிய கருணாநிதியும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாகப் பேசவில்லை. சகோதர யுத்தம் தொடர்பாகவே பேசினோம் என்று கருணாநிதியிடம் திமுகவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தனர்.
ஈழத் தமிழர்களைக் கொன்றவர் பிரபாகரன் என்று ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் என்.கே.கே.பி.ராஜாவும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வி.பி.ராஜனும் பொதுக்கூட்டத்தில் பேசியதாக ஜூனியர் விகடனில் செய்தி வெளியானது.
இந்தக் கருத்து திமுகவுக்கு உடன்பாடானது இல்லை என்று திமுக தலைமைக் கழகம் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிக்கை வெளியிட்டதுடன், இருவரிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் என்.கே.கே.பி.ராஜாவும், வி.பி.ராஜனும் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவாலயத்துக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது இருவரும் கருணாநிதியிடம் விளக்கக் கடிதமும் கொடுத்தனர்.
அதில், சகோதர யுத்தம் தொடர்பாகவே பேசினோம். பிரபாகரன் தொடர்பாக தவறாக எதுவும் பேசவில்லை. பத்திரிகையில் தவறாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
விளக்கத்தைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி, ஈழப் பிரச்சினை தொடர்பாக தலைமைக் கழகத்தின் கருத்தை மீறி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரித்ததாகச் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் ராஜா பேசிய ஓடியோ ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது தான் அப்படி பேசவில்லை பத்திரிக்கை தான் தவறாக தகவல் வெளியிடுள்ளது என்று மழுப்பிய ராஜாவை கருணாநிதி அப்படியே பூசி மெழுகியும் விட்டார்.

சிறிலங்கா இராணுவப் படையின் மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக சாவு!

வடக்கு கிழக்கில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட, சிறிலங்கா இராணுவப் படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக, புற்றுநோய் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமாகியுள்ளார்.
தற்போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக உள்ள ஜெயதிலகவுக்கு வயது 54.
கடந்த 34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளின்போது, வடக்கு கிழக்கில் தீவிரமாக ஈடுபட்ட ஜெயதிலக,
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றியும், 2009ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

19 ஆகஸ்ட் 2012

வேலூர் சிறையிலிருந்து தப்பிய விடுதலைப்புலிகளை இலங்கைக்கு அனுப்பியது நானே - வை.கோ!

வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸில் பிடிபடவில்லை.
இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் வைகோ உரையாற்றுகையில்,
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என தெரிவித்தார்.
சிறையில் இருந்து தப்பிய புலிகளை, இலங்கைக்கு தான் அனுப்பி வைத்ததாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாகரன் சிறந்த போராளி,ராஜபக்‌ச இன வெறியர்!

தமிழ் ஈழம் அழியவில்லை. அது அங்கேதான் உள்ளது. அது தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழ் ஈழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ட தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான சுய உரிமையோடு ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் விருப்பப்பட்டார். ஆனால், சிங்கள இன வெறியர்கள் அதனை ஏற்கவில்லை. வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ் மக்கள் எண்ணினால் வாழலாம்.
இல்லாவிட்டால், அவர்களுக்கான சுய உரிமை கொண்ட தேசத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான விடுதலையில் ஐ.நா-வால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்தியாவும்,அமெரிக்காவும் நினைத்தால், தமிழ் மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம். என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன். ஆனால், அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல. அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம்கொண்டவர். ராஜபக்‌ச இன வெறியர். அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்தும் நன்மை செய்ய மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆகஸ்ட் 2012

வீட்டுக்கு ஒரு பிள்ளைதா என கொடுமை செய்தவன் இன்று சிங்களத்தியுடன் உல்லாசம்!

வீட்டிற்கு ஒரு பிள்ளை தா, இல்லையேல் பெற்றோரை அடைத்து வைப்பேன் என்று படுவான்கரையில் இளைஞர் யுவதிகளை அன்று பிடித்த, அன்றைய விடுதலைப் புலிகளின் தளபதி கருணா, இன்று அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி முன்னால் பொலிஸ் செல்ல, பின்னால் ஆமி செல்ல நடுவில் விசேட அதிரடிப்படை செல்ல உல்லாசமாக குளிர்காற்றடிக்கும் வாகனத்தில் சவாரி செய்கிறார். சிங்களத்தியுடன் உல்லாசமாக காலத்தை கழிக்கிறார்.
ஆனால் பிடிக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள், கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஊனமுற்ற நிலையில் கவலையில் வாடும் பெற்றோர்கள் ஒரு புறம். தங்கள் பிள்ளை இல்லையே என கண்ணீர் வடிக்கும் தாய்மார் இன்னுமொரு புறம். ஆனால் இத்தனை கொடுமைகளை செய்தவன் அரசாங்கத்துடன் சேர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்கிறான். இதற்கு தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தன்மானமுள்ள தமிழனாக வாழ வேண்டுமானால், எமது உரிமைகளை பெறவேண்டுமாக இருந்தால் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என மண்டூரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான ஞா.கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை) தெரிவித்தார்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். சிறையில் வாடும் இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே எனது தேர்தலின் வெற்றியின் பின்பான எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்
‘நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த மிகவும் அடிமட்ட வறுமைக் கோட்டின் கீழ் இருந்த குடும்பத்தில் பிறந்தவன்.
16 வயதில் இருந்து தமிழ் மண்ணை நேசித்து அதற்காக குரல் கொடுத்து சிறைவாசமும் அனுபவித்தவன் நான். என்னை எல்லோரும் வெள்ளிமலை என அழைப்பார்கள். இந்த வெள்ளிமலை முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. எனது குரல் தொடர்ந்து ஒலித்தது. புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் பல சாதனைகளை நிலைநாட்டியவன் நான். இதனால் பல வேதனைகளையும் அனுபவிக்க இந்த வெள்ளிமலை தவறவில்லை.
பல தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கின்றேன். இரண்டு தடவை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். என்றும் தோல்வியைக் கண்டு அஞ்சுபவன் நானல்ல. வெற்றியைக் கண்டு சந்தோசப்படுபவனும் நானல்ல. வெற்றி தோல்வி இரண்டும் ஒன்றுதான். மக்கள் சேவைக்கு என்னை அர்ப்பணித்தவன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தேன். உரத்த கத்தினேன்.
எனது குரல் ஓங்கி ஒலித்தது. பல சவால்களுக்கு முகம்கொடுத்தேன். சிலரால் புறக்கணிக்கப்பட்டேன். பொதுமக்களாகிய உங்களால் அரவணைக்கப்பட்டேன். இதன் பலன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியில் போட்டியிடுகிறேன்.
கடந்த கால வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்தால் வீட்டிற்கு ஒரு பிள்ளை தா, இல்லையேல் பெற்றோரை அடைத்து வைப்பேன் என்று படுவான்கரையில் இளைஞர் யுவதிகளை அன்று பிடித்த, அன்றைய விடுதலைப் புலிகளின் தளபதி இன்று அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி முன்னால் பொலிஸ் செல்ல, பின்னால் ஆமி செல்ல நடுவில் விசேட அதிரடிப்படை செல்ல உல்லாசமாக குளிர்காற்றடிக்கும் வாகனத்தில் சவாரி செய்கிறார். சிங்களத்தியுடன் உல்லாசமாக காலத்தை கழிக்கிறார்.
ஆனால் பிடிக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள், கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஊனமுற்ற நிலையில் கவலையில் வாடும் பெற்றோர்கள் ஒரு புறம். தங்கள் பிள்ளை இல்லையே என கண்ணீர் வடிக்கும் தாய்மார் இன்னுமொரு புறம். எனவே தன்மானமுள்ள தமிழனாக வாழ வேண்டுமானால், எமது உரிமைகளை பெறவேண்டுமாக இருந்தால் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள். உரிமை பெறப்படட்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்படட்டும். இளைஞர் யுவதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்படட்டும். பின்பு தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டும் தானாகவே வரும்.
இன்று தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழனுக்கு ஏதேனும் நடந்தால் தட்டிக்கேட்க சர்வதேச சமூகம் உண்டு. அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்ற மாயவலையில் சிக்க வேண்டாம். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பரீட்சையில் சித்தியடைந்து எமது பலத்தை நிருபிப்போம். எமது பலத்தை ஒருங்கிணைப்போம். எமது பாதையை பலப்படுத்துவோம். எமது சிந்தனையை நடைமுறைப்டுத்துவோம். எல்லாவற்றிற்கும் உங்கள் ஆணை தேவை என அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகள் தொடர்பிலான சட்டத்தில் மாற்றம்!

அவுஸ்திரேலியா தனது அகதிக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியா புதிய சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் அகதிகளை வேறு நாடுகளில் தங்க வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேறு நாடுகளுக்கு இடம் நகர்த்துவது குறித்த சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அகதிகளை தங்க வைப்பதனால் நீண்ட காலம் அகதிகள் காத்திருக்க நேரிடும் என்ற காரணத்தினால் முன்னர் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
பப்புவா நியூகினியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளை தங்க வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்த அதிகளவான அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


17 ஆகஸ்ட் 2012

தென்னாபிரிக்க அனுசரணையை இலங்கை ஒருபோதும் ஏற்காது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கு, தென்னாபிரிக்க அரசு வழங்க முன் வந்துள்ள அனுசரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அரசியல் தீர்வுக்கு, தமது அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக, கொழும்பு வந்த தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் எப்ராகிம் தலைமையிலான குழு இலங்கை அரசதரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றிடம் கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள், உள்ளூர் அரசியல் முயற்சிகளில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தேவையில்லை என்று கூறியுள்ளன. அதற்கு இலங்கை அரசு ஒருபோதும் இணங்காது எனவும் அவை கூறியுள்ளன.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆசியுடன் தான் தென்னாபிரிக்கா இந்த அனுசரணையை வழங்க முன்வந்துள்ளதாக் நம்பப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தென்னாபிரிக்கா இந்த அனுசரணைப் பணியை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜெனிவா அழுத்தங்களில் சிறிலங்காவைத் தப்பிக்க விடக்கூடாது – இரா.சம்பந்தன்

ஜெனிவா தீர்மான அழுத்தங்களில் இருந்து தப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்தப் பார்க்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, ஆனந்தபுரியில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு மாகாணசபைக்கான இந்தத் தேர்தல் கடவுளால் எமக்குத் தரப்பட்ட சந்தர்ப்பம்.
நீதியும், நியாயமும் வெற்றி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.
இதனை சரியாக எதிர்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடமை.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஐனநாயகத் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
தந்தை செல்வாவின் வழியில் - கண்ணியமான, நிதானமான வழியில் சென்று கொண்டிருக்கும் நாம், அதன் மூலம் நீடித்து நிலைக்கத்தக்க நிரந்தரத் தீர்வைப்பெற முனைகிறோம்.
சிறிலங்கா அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில், அதிகபட்ச அதிகாரத்துடன் கூடிய அரசியல்தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றே கூறியுள்ளது.
ஆனால் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை தமிழர்களுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் எழுந்துள்ள அனைத்துலக அழுத்தங்களில் இருந்து விடுபட, கிழக்கு மாகாணசபையில் வெற்றி பெறவேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர்கள் இப்போது பகிரங்கமாகவே கூறுகின்றனர்.
இதனை நாம் அனுமதிக்க முடியுமா? அனைத்துலக சமூகத்திடம் உள்ள தமிழர்களுக்கு சார்பான சிந்தனையை இந்தத் தேர்தல் மூலம் நாம் பலப்படுத்தப் போகின்றோமா? அல்லது பலவீனப்படுத்தப் போகின்றோமா?
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை நாம் கைப்பற்ற வேண்டும்.
இதனை நாம் சாதித்தால், கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை எம்மால் கைப்பற்ற முடியும்.
அதன் மூலம் அனைத்துலக சமூகத்துக்கு நாம் தெளிவான ஒரு செய்தியை சொல்ல முடியும்.
ஐனநாயக ரீதியான முடிவைத் தவிர, பலம் வாய்ந்த முடிவு வேறு ஏதும் இல்லை.
மாகாணசபை முறைமை முழுமையானது அல்ல. ஆனால் அர்த்தபூர்வமான அதிகாரங்களைக் கொண்டதாக அதனைக் கட்டியெழுப்ப வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

16 ஆகஸ்ட் 2012

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - இரா.சம்பந்தன்

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.
இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும்.
ஐதேக 7 ஆசனங்களில் வெற்றிபெறுமேயானால், நாம் 20 ஆசனங்களைப் பெறமுடியும்.
இதன்மூலம் கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலம் கொண்ட- ஐதேக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம்.
ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியும் என்று நாம் நம்பவில்லை.
அவை சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.
எனவே, நாம் 20 ஆசனங்களைக் கைப்பற்றினால், இலகுவாக முதல்வர் பதவியைப் பெறமுடியும்.
அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும்.
எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்லதொரு சந்தர்ப்பம்.
அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் ஒருபோதும் மறக்க போவதில்லை

  • thamilaruvi_16_8
கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டினால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எள் முனை அளவு கூட நன்மை கிடையாது என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். பின்னர் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கருணாநிதி நடத்திய டெசோ மாநாடு மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லையென்றால் எந்தவித தடயமும் இல்லாமல் முடிந்திருக்கும்.
நடந்த முடிந்த டெசோ மாநாட்டினால் ஈழத் தமிழர்களுக்கு எள் முனையளவும் நன்மை இல்லை. 1956 முதல் அறிக்கை, பொதுக்கூட்டம், பேரணி மூலம் ஈழ மக்களுக்கு அரசியல் தீர்வை தந்துவிட முடியும் என்று நினைப்பது கலைஞரின் அரசியல் நாடகத்தில் ஒன்றாக இருக்க முடியுமே தவிர நிரந்த அரசியல் தீர்வை தராது.
இந்திய அரசு நினைத்தால் தீர்வு ஏற்படுத்தலாம். தி.மு.க.அந்த கூட்டணியில் இருக்கிறது. இந்திய அரசு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டுவிட்டு செய்யமுடியாத மக்களை திரட்டி செய்ய வேண்டும் என்று சொல்வது கருணாநிதியின் கபட அரசியல். உலக தமிழர்கள் கருணாநிதி செய்த துரோகத்தை மறக்க போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

15 ஆகஸ்ட் 2012

டெசோ என்ற பெயரில் கலைஞர் அரங்கேற்றிய பராசக்தி!

ratha_15_8டெசோ மாநாடு என்ற நாடகத்தை, தி.மு.க., வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த காலத்திலும், நன்மை கிடைக்காது என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பராசக்தி நாடகத்தை, “டெசோ´ என்ற பெயரில் மீண்டும் அரங்கேற்றியுள்ளார். இந்த மாநாட்டால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்துவிட்டு, எஞ்சியுள்ளவர்களின் நலனுக்காக, “டெசோ´ மாநாட்டை நடத்துவதாக கருணாநிதி கூறுகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க.,வால் எப்போதும் நன்மை கிடைக்காது. இந்திய தேசிய முஸ்லிம் லீக்: உண்மையான ஈழத் தமிழர்கள் யாரும் “டெசோ´ மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டால், ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது.தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது, ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதையும் செய்யவில்லை. அமைச்சர் பதவிக்காக, காங்கிரசை மிரட்டும் தி.மு.க., ஈழத் தமிழர் நலனுக்காக அதுபோன்ற நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.

14 ஆகஸ்ட் 2012

நவநீதம்பிள்ளையின் முடிவினால் சிறிலங்கா கலக்கம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான பூகோள கால மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கலக்கமடைந்துள்ளது.
இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்த மூன்று நாடுகளையும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார்.
ஆனால் இந்த நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது சிறிலங்காவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்த மூன்று நாடுகளும் ஆதரித்திருந்தன.
இதுவே சிறிலங்காவுக்குக் கலக்கம் ஏற்படக் காரணம் என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

13 ஆகஸ்ட் 2012

நேற்றுக்காலை சென்னையில் நடைபெற்ற டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர் கருத்துக்கு தடை!

நேற்றைய தினம், சென்னை நட்சத்திர ஹோட்டல் அக்ஹட் மெட்ரோ பொலிடனில் நடைபெற்ற டெசோ தீர்மானம் குறித்த விவாதத்தில் 2 ஈழத் தமிழர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தீர்மானங்கள் மீதான விவாதத்தை கலைஞர் தலைமை ஏற்று நடத்த மு.க.ஸ்டாலின், ரி.ஆர்.பாலு, சுபவீரபாண்டியன், கனிமொழி, அமைச்சர் பொன்முடி, போன்றவர்கள் உடன் இருந்தனர்.
அதில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் இருவரின் ஒருவர், எழுந்து ஈழத்துக்கும், தமிழ் ஈழத்துக்குமே வித்தியாசம் தெரியாத இந்திய மத்திய அரசு, 13 வது திருத்தச் சட்டம் மூலமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானது என தனது கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தார். இவர் பேசும்போது குறுக்கிட்ட ரி.ஆர்.பாலு திரு.கண்ணன் அவர்களைப் பேசவிடாது தடுத்தார் !
இதனைத் தொடர்ந்து, தாம் கூறவந்ததையாவது சொல்லவிடுமாறு அவர் வேண்டிக்கொண்டார். தாம் ஒரு ஈழத் தமிழர் என்றும், தமிழ் ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அந் நாட்டின் பூர்விக்கக் குடிமக்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனக் குறிப்பிட்ட திரு.கண்ணன் அவர்கள், தம்மை சிறுபாண்மை இனத்தவர்கள் என்று கூறவேண்டாம் என்பதனையும் ஆணித்தரமாகக் கூறினார்.
இதனிடையே குறுக்கிட்ட எம்.பி கனிமொழி, ஏன் 13 வது திருத்தச் சட்டத்தை நீங்கள் எதிரிகிறீர்கள் ? குறைந்த பட்சம் 1 காரணத்தையாவது கூறமுடியுமா என வினவினார். காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அதில் சரியான அலகில் பங்கிடவில்லை என்றும், 13 வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தி தமிழர்களுக்கு தீர்வு பெறப்பட்டால், அது ஈழத் தமிழர்களை சிங்களவர்களிடம் நிலந்தரமாகவே அடிமையாக்கிவிடும் என்பதனை அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடித்துக் கூறினார்.
கடும் ஆங்கிலப் புலமையும், ஈழத் தமிழிலும் அவர் கூறிய இவ் வார்த்தைகள் அங்கே வந்திருந்த மொராக்கோ, ஸ்வீடம், நைஜீரியா, மலேசியா, துருக்கி, ஆஜன்டீனா போன்ற நாடுகளின் பிரமுகர்களைக் கவர்ந்தது. அவர்கள் திரு.கண்ணனிடம் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக கேட்டறிய ஆரம்பித்தவேளை மீண்டும் குறுக்கிட்ட ரி.ஆர் பாலு, டெசோ தீர்மானங்கள் குறித்து விவாதிக்கவே இந்த அரங்கம் கூட்டப்பட்டதாகவும், வேறு விடையங்கள் குறித்து ஆராய இது கூட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். சு.பவீரபாண்டியம், கனிமொழி ஆகியோரின் பலத்த எதிர்புக்கு மத்தியிலும் கருத்தரங்கில் கலந்துகொண்ட் இந்த ஈழத் தமிழர் இந்திய மத்திய அரசைக் கண்டிக்க தவறவில்லை !
டெசோ தீர்மானத்தில், மேலும் 2 புதிய தீர்மானத்தை சேர்த்துக்கொள்ள முடியுமா என ஈழத் தமிழரான திரு.கண்ணன் கேள்வி எழுப்பினார். 13 வது திருத்தச் சட்டத்தை டெசோ ஆதரிக்கவில்லை என்றும், வட -கிழக்கு தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசாமல் மலையக்த் தமிழர்களாகிய இந்திய பூர்வீகத் தமிழர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதில் மலையகத் தமிழர் பாதுகாப்பு குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கலைஞர் பதுலளித்தார்.
ஆனால் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அவர் வாயே திறக்கவில்லை. பின்னர் நடைபெற்ற விவாதத்தில், ஏற்கனவே போடப்பட்ட 11 தீர்மானத்தில் மேலும் 3 புதிய தீர்மானங்களை தாம் இணைப்பதாக சு.பவீரபாண்டியன் தெரிவித்தார். ஜெயலலிதா அரசைக் கண்டிப்பது, இலங்கை அரசின் மிரட்டலைக் கண்டிப்பது, குடிவரவு தொடர்பான மாற்றத்தை பரிந்துரைப்பது என்று தீர்மானிக்கப்பட்டதே தவிர, ஈழத் தமிழர்கள் விடுத்த கோரிக்கை எதனையும் தி.மு.கவினர் ஏற்றுக்கொள்ளவில்லை !
பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும், மிகவும் அனுபவமிக்க அரசியல்வாதிகளோடு போராடி தமது கருத்தை முன்வைத்த ஈழத் தமிழனின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் அவர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

-நக்கீரன்-

12 ஆகஸ்ட் 2012

டெசோவில் முழக்கமிட்டார் கருணாநிதி!

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில் கூறியதாவது,
'இலங்கைத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் திமுக நடத்திய போராட்டங்களையும் தமது உரையில் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆய்வரங்கில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பதவி இழந்ததும் தமிழர் பிரச்சனையால்தான் தமிழரால்தான் என்பதை சொல்ல மறந்து விட்டார் கருணாநிதி.

10 ஆகஸ்ட் 2012

கருணாநிதி செய்த துரோகத்தை நினைத்து கொந்தளித்த போராளி!

முள்ளிவாய்க்காலில்  கருணாநிதி செய்த துரோகத்தை நினைத்து கொந்தளித்த முன்னாள் போராளி!காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் ‘டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு.
அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
முள்ளிவாய்க்காலில் கடைசி வரை இருந்த போராளி ஒருவர் ஆனந்தவிகடன் இதழுக்கு வழங்கிய தகவலில் இருந்து,
சேசுராஜ், முன்னாள் போராளி.
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக் கிடந்தேன்.
அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.
அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர்.
கருணாநிதி அறிவித்ததாக ‘போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம்.
அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது.
அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு.
ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!

பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமே நிலையான சமாதானத்தை எட்ட முடியாது.

newsபொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் அறிவுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சேவையாற்றப்பட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாது உள்ளனர் எனவும், பெரும்பாலான இடம்பெயர் மக்களுக்கு உரிய இருப்பிட வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் யுத்த வலய மக்களில் பலர் இன்னமும் பிரச்சினைகளையே எதிர்நோக்கி வருவதுடன் பெண்களும், ஊனமுற்றவர்களும் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கிறிஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தி மிகவும் அவசியமானது, எனினும், அபிவிருத்தியினால் மட்டும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மிகவும் காத்திரமான அறிக்கையாகவே உள்ளது எனவும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் காத்திரமான முறையில் அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதே பிரான்ஸின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியன தொடர்பில் சரியான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை தமிழ் சிங்கள மொழிகளில் பிரசுரமாக உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வெளிவிவகாரக் கொள்கைளில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், சிறிலங்காவுடனான உறவுகளில் மாற்றம் இருக்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

09 ஆகஸ்ட் 2012

கருணாவை கொலை செய்ய தலைவர் பிரபாகரன் நினைத்ததில்லை!

கருணாதான் நினைத்தாரே ஒளிய தலைவர் கருணாவை கொலை செய்யும் சிந்தனையில் இருக்கவில்லை அது மட்டும் உண்மை கருணாவின் துரோகம்,இப் போராட்டம் விழுவதற்கு பிரதான காரணமாகும் எனலாம் என நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல உண்மைத் தன்மையையும் கேள்விகளையும் கேட்டுள்ளார்.

போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள்!

2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று நிகழ்த்தியுள்ள உரை உறுதி செய்துள்ளது.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.
இந்த உரையில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான புள்ளிவிபரங்களை அவர் சமர்ப்பித்தார். இதன்படி போரின் முடிவில் 11,989 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக அவர் கூறினார். இவர்களில், இதுவரை 10,965 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 636 விடுதலைப் புலிகள் இன்னமும் மருதமடு, கண்டகாடு, வெலிக்கந்த, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை விட மேலும் 383 விடுதலைப் புலிகள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இதன்படி, ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள, மற்றும் தற்போதும் தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 11,984 பேர் மட்டுமேயாகும். இதனால், போரின் இறுதியில் சரணடைந்த 11,989 விடுதலைப் புலிகளில், ஐந்து பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக மாநாட்டுக்கு வந்திருந்த ஊடகவியலாலர்கள் பேசிக்கொண்டனர்.

08 ஆகஸ்ட் 2012

லண்டனில் பறக்கும் புலிக்கொடியால் கடுப்படைந்துள்ள சிறீலங்கா!

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரச்சாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு பிரித்தானியா இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துக்களை வேறெந்த நாடுகளினதும் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்பட அனுமதிக்கப்படமாட்டார்கள் என பிரித்தானியா முன்னர் அறிவித்திருந்தது.
இருந்தபோதிலும் விடுதலைப் பலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஒலிம்பிக் கிராமம் ஒன்றுக்கு அருகில் ஸ்ட்ராட்போர்ட் என்ற இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். அத்துடன் பிரித்தானிய தேசியக்கொடிக்கு அருகில் புலிக்கொடியை ஏற்றியிருந்த எதிர்ப்பாளர்கள் ஒலிம்பிக் நிகழ்வில் இலங்கை வீரர்கள் பங்குகொள்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும் போர்க் குற்றங்களை விசாரிப்பதுடன் லண்டனில் அகதிகளாக இருப்பவர்களை திருப்பியனுப்பக் கூடாது எனவும் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
இந்த நிலையில் புலி ஆதரவாளர்களின் இவ்வாறான சுதந்திரமான செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்குவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருக்கும் இலங்கை அரசு,இது தொடர்பில் தமது ஆட்சேபனையை இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசின் இந்த அதிருப்தியை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திடம் வெளிப்படுத்தும் என அறியவருகின்றது.

07 ஆகஸ்ட் 2012

மகிந்தவுக்கு விலங்குகளை வளர்க்கும் புதுமையான நோய்: மங்கள சமரவீரவின் கடி!

சிறிலங்கா ஜனாதிபதிக்கு விலங்குகளை விலைக்கு வாங்கி வளர்க்கும் புதுமையான நோய் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் 45 லட்சம் ரூபா செலவிட்டு அமெரிக்காவில் இருந்து பஞ்சவர்ண கிளி இறக்குமதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு இந்த கிளியை எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த தனது கிளியை எடுத்துக் கொண்டு தங்காலைக்கு சென்றிருந்த போது, அந்த கிளி ஜனாதிபதியை விட்டு பறந்து சென்று விட்டதாகவும் பின்னர் அது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடற்படைச் சிப்பாய ஒரவரிடம் சிக்கியதாகவும் - அதனை பிடித்த அந்த சிப்பாய், கிளியே சோறு சாப்பிட்டாய எனக் கேட்ட போது நாட்டை சாப்பிட்டேன், நாட்டை சாப்பிட்டேன் எனக் கூறியுள்ளது என்றும் மங்கள நக்கலாக குறிப்பிட்டுள்ளார். கோத்தபாயவும் இவ்வாறு செல்லப்பிராணிகளை வளர்க்கின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அரசாங்கத்திற்கு செய்தி ஒன்றை வழங்க வேண்டும். மாகாண சபைகளை கைப்பற்றி ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும், இந்த செய்தியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார். சப்ரகமுவ மாகாண சபைக்கு போட்டியிடும். சிறிபால கிரியெல்ல என்பவரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்

பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல்-ஹக்கீம்

காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.
இவ்வாறு தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்.
மேலும், தமிழர் தரப்பு பதவிக்குச் சோரம் போகாமல் அசைக்கமுடியாத அரசியலைச் செய்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் தமது அரசியலில் அபிவிருத்தி அரசியலையும், எதிர்ப்பு அரசியலையும், இணக்க அரசியலையும் என எல்லா அரசியலையும் கலப்படம் செய்து மக்களின் ஆத்திரத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசா ரக்கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியவை வருமாறு
புலிகளால் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
காவியுடை தரித்துள்ள பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்தப் பயங்கரவாதத்தினால் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்கள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களினால் நிம்மதியாகப் பள்ளிவாசல்களில் தொழுதுகொள்ளமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள், உறவினர்கள் என சிலர் சேர்ந்து இந்த ரமழான் மாதத்திலே வீடுகளைப் பூட்டிக்கொண்டும் தொழமுடியாத சூழல் காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்களை அரசில் ஆட்சியின் ஓர் அங்கமாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆங்காங்கே விமர்சன ரீதியாகப் பேசமுடியாதென்றால், அதற்கான அந்தஸ்து எமக்கில்லை என்றால், எமது பாதுகாப்புக்கும், இருப்புக்கும் காட்டமான நடவடிக்கைகள் இல்லையென்றால் இவற்றை நியாயம் என்று எப்படிக் கருதமுடியும்?
இந்த விடயங்களைப் பற்றியே நான் பேசிக்கொண்டு வருகின்றேன். எமது விமர்சன ரீதியான பேச்சுகள் அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. ஆகவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாக்குப்பலத்தால் மேற்படி விடயங்களில் தங்களுக்கு இருக்கின்ற அதிருப்தியை இந்த அரசிற்குக் காட்டியாகவேண்டும்.
இன்று மக்கள் அபிவிருத்திகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். வெற்றிலைச் சின்னத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்று கட்சியின் உயர்மட்டத்தில் அபிப்பிராயங்கள் இருந்தாலும், மரச்சின்னத்தில் வரவேண்டுமென்றே அடிமட்ட ஆதரவாளர்கள் விரும்பினார்கள் என்றார் அவர்.

06 ஆகஸ்ட் 2012

சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள்!

யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய கம்மினிஸ் கட்சியின் தமிழ் நாட்டு தலைவர் தா.பாண்டியன் அதிரடி செவ்வி அதிர்ச்சியில் இந்திய ஊடகம்.

மீதமுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய.

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கைக்கு உள்ளும் மற்றும் வெளியிலும் சிலர் உள்ளனர். ஒட்டுமொத்தமாக உள்ளும் புறமும் உள்ள இந்தச் சக்திகள் அமைதியையும், ஸ்திரப்பாட்டையும் சீர்குலைக்க எத்தனிக்கலாம். அதனால் பாதுகாப்புப் படைகள் விழிப்பாக இருக்கவேண்டும்.
இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திருகோணமலையில் வைத்து எச்சரிக்கை விடுத்தார். இலங்கை விமானப் படையின் "கடேற்' அதிகாரிகள் 83 பேருக்குப் பதவியுயர்வு வழங்கும் வைபவம் திருகோணமலை சீனன்குடா விமானப்படைத்தளத்தில் நடைபெற்றது.
இவ்வைபவத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் பாதுகாப்புப் படையினரை இவ்வாறு கோரியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
"30 வருடகால நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பும், ஸ்திரப்பாடும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத் தப்பட வேண்டும். இது அனைத்து இராணுவ அதிகாரிகளினதும் தலையாய கடமையாகும்'' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்தச் சக்திகளின் மிரட்டல்கள் குறித்து எம்மால் அசமந்தமாக இருந்துவிட முடியாது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது மிக மிக அவசியமாகும்.
சமாதானமும், ஸ்திரப்பாடும் நீடிப்பதை நாம் உத்தரவாதப்படுத்தவேண்டும். இதன் மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும்'' என்றும் கோட்டாபய நம்பிக்கை தெரிவித்தார்.
"போருக்குப் பின்னர் ஆயுதப்படைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பொறுப்புகள் வழமைக்கு அதிகமானவையாகக் கூட இருக்கலாம். போர் முடிவுற்று அதிக காலம் சென்றுவிடவில்லை. போர்முனையில் முனைப்போடு செயற்பட்ட சில அதிகாரிகள் உலகின் பல்வேறு நாடுகளில் தூதுவர்களாகவும், துணைத்தூதுவர்களாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு பெரிதும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அநேக அதிகாரிகள் அதிமுக்கியமான தூதரகங்களில் பாதுகாப்பு அத்தாட்சிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பல்வேறு தகைமைகளைக்கொண்டவர்கள். இவற்றில் இவர்கள் தமது படைகளுக்குக் கொண்டுவந்த பேரும், புகழும் அடங்கும். இப்படைகள் தங்கள் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளன. இது போன்று நாட்டுக்கு மேலும் சேவைபுரிய தமது தொழிலையும், அர்ப்பணிப்பையும் தக்கவகையில் இதர பல வழிகளிலும் பயன்படுத்த இவர்களுக்கு அரிய வாய்ப்புண்டு'' என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
"புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகக் கலையரங்கு நிர்வாகப் பீடத்திலும் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளனர். இராணுவ அதிகாரிகளின் கலைத்துறை ஆர்வம், திறமை ஆகியவை குறித்து சில கலைத்துறைப் பிரிவுகள் சந்தேகப்படலாம். ஆனால், இவர்கள் ஆற்றிய சேவைகளை எவராலும் எளிதில் மட்டிட முடியாதென்பதை நாம் அறிவோம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

05 ஆகஸ்ட் 2012

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என ரணசிங்க பிரேமதாச எச்சரிக்கைவிடுத்தார் – மெஹ்ரோட்ரா

இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்கபிரேமதாச எச்சரிக்கை விடுத்ததாக இந்தியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் லக்ஹான்லால் மெஹ்ரோட்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் செய்ய நேரிடும் என பிரேமதாச எச்சரிகi;க விடுத்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை உறவுகள் தொடர்பில் அண்மையில் கொழும்பில்நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது மெஹ்ரோட்ரா இதனைத்தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேடபிரதிநிதியான பி.ஜீ. தேஷ்முக்கிடம், பிரேமதாச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
1989 ஆண்டு ஜூலை இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் மத்திய அரசாங்கம்ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கா விட்டால் தனது அரசியல் வாழ்க்கைசூன்யமாகிவிடும் என பிரேமதாச தெரிவித்தார்.
1989ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதிக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால்தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என பிரேமதாச குறிப்பிட்டார்.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக போராடுவதற்கு தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கினார்.
இந்திய அமைதி காக்கும் படையினரை நாட்டை விட்டு வெளியேற்ற எந்தஎல்லைக்கும் செல்லத் தயார் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளைதுண்டித்துக் கொள்ளவும் தயார் எனவும் பிரேமதாச தெரிவித்தார் என மெஹ்ரோட்ராகுறிப்பிட்டுள்ளார்
தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையும் நோக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
1990ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி அனைத்து அமைதி காக்கும்படையினரும் இந்தியா திரும்பினர்.