டெசோ மாநாடு என்ற நாடகத்தை, தி.மு.க., வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த காலத்திலும், நன்மை கிடைக்காது என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பராசக்தி நாடகத்தை, “டெசோ´ என்ற பெயரில் மீண்டும் அரங்கேற்றியுள்ளார். இந்த மாநாட்டால், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்துவிட்டு, எஞ்சியுள்ளவர்களின் நலனுக்காக, “டெசோ´ மாநாட்டை நடத்துவதாக கருணாநிதி கூறுகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க.,வால் எப்போதும் நன்மை கிடைக்காது. இந்திய தேசிய முஸ்லிம் லீக்: உண்மையான ஈழத் தமிழர்கள் யாரும் “டெசோ´ மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இம்மாநாட்டால், ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது.தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது, ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதையும் செய்யவில்லை. அமைச்சர் பதவிக்காக, காங்கிரசை மிரட்டும் தி.மு.க., ஈழத் தமிழர் நலனுக்காக அதுபோன்ற நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக