
பொலனறுவை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1994ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமரர் காமினி திஸாநாயக்க போட்டியிட்டார்.
காமினி திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக வகுத்த சகல வியூகங்கள் தொடர்பான உளவுத் தகவல்களையும் ரணில் விக்ரமசிங்க, பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு வழங்கினார். இது தொடர்பான ஆதாரங்களையும் என்னால் சமர்ப்பிக்க முடியும்.
தேர்தலில் வெற்றியீட்டுதற்காக மேற்கொண்ட சகல திட்டங்கள் தொடர்பான இரகசிய தகவல்களையும் ரணில் விக்ரமசிங்கவே, சந்திரிக்காவிற்கு வழங்கினார்.
அரசியல் மேடைகளில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சொல்லும் கட்டுக்கதைகளாக இந்தத் தகவல்களை கருத வேண்டாம்.
1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் காமினி திஸாநாயக்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது முதல், அவரை தோற்கடிக்க வேண்டுமென ரணில் முயற்சி செய்தார்.
காமினி திஸாநாயக்கவை எவ்வாறு தோற்கடிப்பது என்பது பற்றிய அனைத்து இரகசிய தகவல்களையும் ரணில் விக்ரமசிங்க எமக்கு வழங்கினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை எந்த இடத்திலும் நிரூபிக்கக் கூடிய சான்றுகள் இருக்கின்றன.
ஜனநயாகம் பற்றி பேசி வரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஆறு ஆண்டுகளுக்கு கட்சித் தலைவர் பதவியை பலவந்தமாக பறித்துக் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக