04 ஆகஸ்ட் 2012

ரமழானில் பெண்கள் தொழ முடியாத நிலை"நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கக்கீம்.

Vollbild anzeigen"இந்த அரசாங்கம் பலமான அரசாங்கம் என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இந்த புனித ரமழான் மாதத்திலே பெண்கள் தொழ முடியாத நிலை காணப்படுகின்றது. பெரும்பான்மையினத்தினர் கூடி, குழப்புவதற்கு இருக்கின்றனர். இதனை தடுப்பதற்கு அருகதையில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்'"என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
கிண்ணியாவில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தலைமையில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், "நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடப்போவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பத்தில் அறிக்கைகளை விட்டனர். இப்போது அவர்களுக்கு பெரும் சந்தோசம். இதெல்லாம் பார்க்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சி, எந்தத் தரப்பு ஆசனங்கள் எடுத்தாலும் எங்களின் ஆசனத் தொகையை வைத்தே ஆட்சியைத் தீர்மானிக்க வேண்டும் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகவுள்ளது.
இன்று முஸ்லிம்களுக்கு பாரிய சவால்கள் உள்ளன. 40 முஸ்லிம்கள் குடும்பங்கள் வீட்டில் ஒன்று கூடி தொழ முடியாமல் உள்ளது. பிக்குகள் வந்து கலாட்டா செய்யும் நாடாக இது மாறியுள்ளது. இதை முஸ்லிம் காங்கிரஸ் தவிர வேறு யாரும் தட்டிக் கேட்பதில்லை.
இந்த அரசாங்கம் பலமான அரசாங்கம் என்று சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இந்த புனித ரமழான் மாதத்திலே பெண்கள் தொழ முடியாத நிலை காணப்படுகின்றது. பெரும்பான்மையினத்தினர் கூடி, குழப்புவதற்கு இருக்கின்றனர். இதனை தடுப்பதற்கு அருகதையில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்.
தப்பித் தவறி ஒரு சின்னத்தில் நாங்கள் சரணாகதி அடைந்திருந்தால்.... இந்த சரணாகதி அரசியலில் ஒருபோதுமே தயாரில்லாது இருந்தோம். எங்களது பார்வையில் அந்த இடத்திற்கு போய் விடுவோமோ பயம் இருந்தது. மக்களிடம் எதைச் சொல்வோமோ பயந்திருந்தோம். இதிலிருந்து எப்படி நாங்கள் கழன்று செல்வோம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.
இன்று நேற்றல்ல, கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தீர்மனித்தோம் மரத்தில்தான் கேட்க வேண்டும் என்று. ஆனால் மற்ற மாவட்டத்தில் தனித்தும் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்துடனும் இணைந்தும் போட்டியிட்டு பல ஆசனங்களைப் பெற்றோம்.
இன்று இந்நாட்டில் இவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றதே இந்த அநியாயங்களுக்கு எங்கள் கட்சி ஆதரவாளர்களின் ஆத்திரத்தை, ஆவேசத்தை அள்ளிக் கொட்டுவதற்கும் ஒரு வழி வகை வேண்டும். ஆளும் தரப்புக்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் முஸ்லிம்களின் மனம் என்பதே அர்த்தம் சரியாக காண்பிக்கப்பட வேண்டும்.
அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஆதரவு தெரித்து கொண்டாடினர்கள். ஆனால், ஆட்சித்தரப்பில் உள்ளோர்கள் முஸ்லிம் காங்கிரஸை தவற விட்டு விட்டோமே என்று இப்போது தவிக்கின்றார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் எங்களது கட்சி பேரம் பேசும் சக்தியை நாம் இழப்பதற்கு தயாரில்லை. நாங்கள் வலுவான கட்சியாக இல்லையென்றால் இக் கட்சியின் பிரயோக வலுஇல்லாமல் போய்விடும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக