யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றி்ல் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளாா் உயா்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியா் க.பொ.த சாதாரண தரத்தின் கீ்ழ் உள்ள மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
மாணவ தலைவா்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியாிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளாா். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியா் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னா் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவ் ஆசிரியா் உடனடியாகவே மாணவிக்கு தொடா்பு எடுத்து ஏசிய போது தன்னைக் காதலிக்கா விட்டால் தற்கொலை செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளாா். இச் சம்பவம் தொடா்பாக அதிபருடன் கலந்தாலோசித்த ஆசிரியா் குறித்த மாணவியின் வீட்டுக்கு அதிபருடன் சென்று மாணவியின் நிலையைச் சொல்லியுள்ளதாகத் தெரியவருகின்றது, தற்போது குறித்த மாணவி பாடசாலை வராது வீட்டில் நிற்பதாகவும் தனது நண்பிகளிடம் குறித்த ஆரிசியா் தன்னைக் காதலிப்பதாக தவறான முறையில் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருவதாகவும் தெரியவருகின்றது. இந்த விடயத்தால் அப்பாடசாலையின் குறிப்பிட்ட சில வகுப்புக்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதிக்கு மாத்திரமல்லாது அவரது அரசாங்கத்தின் அரசியலுக்கும் சவக்குழியை தோண்டும் நிலைக்குச் சென்றுள்ளதாக ராவய பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதாரணமாகும். பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் இயற்கைக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சின் பலத்தில் மேற்கொண்டு வரும் ஒன்றாக இருக்கின்றது. அவரது பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அமைதியாக வேடிக்கை பார்த்தது.பாதுகாப்புச் செயலாளருடன் ஞானசார தேரருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி அனைவரும் அறிந்திருந்ததே இதற்கு காரணமாகும். நாட்டை இராணுவ மயமாக்கலுக்கு தள்ளுவதே கோத்தபாய ராஜபக்ஷ நாட்டுக்கு மேற்கொண்டு வரும் மிகவும் கெடுதியான நடவடிக்கையாகும். சிவில் அதிகாரிகள் வகிக்க வேண்டிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தல், இராணுவ அதிகாரிகளை தூதுவர் பதவிகளுக்கு நியமித்தல், கல்வித்துறையை இராணுவமயப்படுத்தியமை ஆகியவற்றுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும்.
இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் கனிஷ்ட புதல்வி எனவும் இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,