22 ஆகஸ்ட் 2010

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது ஜே வி பி.



இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சர்வதேச நாடுகளை கோரப்போவதாக ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார்.
சமீபத்தில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார்
அகிம்சை ரீதியான எதிர்ப்புக்களுக்கு இலங்கையில் இடமில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்
காலியில் சரத் பொன்சேகாவை விடுகவிக்குமாறு கோரி நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைத்தாக்குதலை நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது

21 ஆகஸ்ட் 2010

61 வயது பிலிப்பைன்ஸ் பெண்ணை கற்பழிக்க முயன்று வாங்கிக் கட்டிய 41 வயது இலங்கையர்!



இத்தாலியின் மிலான் நகரில் 61 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டினார் 41 வயது உடைய இலங்கையர் ஒருவர். இப்பெண்மணி தாதியாக கடமையாற்றுகின்றார்.
ஆனால் இவர் கராட்டிக் கலையில் கறுப்புப் பட்டியை பெற்றுக் கொண்டவர். இவர் நேற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் ஒரு தொடர்மாடியில்தான் வசிக்கின்றார்.
இந்த இலங்கையரும் இத்தொடர்மாடியில்தான் இருக்கின்றார். இவர் மின்சாரத்தில் இயங்கும் மாடிப்படி ஊடாக சென்றபோது கத்தரிக்கோல் ஒன்றுடன் இலங்கையர் இவருக்காக வெளி வாசலில் காத்திருக்கின்றார்.
இலங்கையர் உள்ளாடை மாத்திரம் அணிந்திருந்தார். மதுபானமும் அருந்தி இருக்கின்றார்.. கத்திரிக்கோலால் மிரட்டி அவருடைய அறைக்கு இப்பெண்ணை கொண்டு செல்ல முயன்றிருக்கின்றார்.
ஆனால் சாதுரியமாக செயற்பட்ட அந்தப் பெண் கராட்டி முறையில் இலங்கையரைத் தாக்கி நிலைகுலையச் செய்தார். பின் பெரிதாக சத்தமிட்டார். அவரின் சகபாடிகள் இருவர் அவரின் குரலைக் கேட்டு உதவிக்கு வந்தனர். பொலிஸார் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டனர். இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

இலத்தீன் அமெரிக்கர்கள் கனடா அகதிகளுக்கு ஆதரவு.



கடந்த வாரம் கனடாவை அடைந்துள்ள 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட 490 இலங்கை அகதிகளையும் பாதுகாப்பதற்கு கனடாவிலுள்ள இலத்தீன் அமெரிக்கர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இலத்தீன் அமெரிக்கக் குழுக்கள் கையொப்பமிட்ட அறிக்கையொன்றும் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை ஆவன,"கனடாவிலுள்ள இலத்தீன் அமெரிக்கச் சமூகமாகிய நாங்கள் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடக்கமாக கனடாவை அடைந்துள்ள 400-500 தமிழ்ச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு எமது ஆதரவைத் தருவதாக பிரேரிக்கிறோம். இந்த அகதிகளை பயங்கரவாதிகளாக வகைப்படுத்தி கனடியன் ஊடகம் மற்றும் பொது அதிகாரிகள் இதை அரசியல் நோக்கமானதாகச் செய்கிறார்கள். இந்த அறிக்கைகள் எல்லாம் இன அழிப்பில் ஈடுபடும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டன. இந்த மக்களுக்கான மனித மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை எங்கள் அரசாங்கம் மறுப்பதானது இனப்பாகுபாடான மற்றும் அந்நிய நாட்டவர் மீது காட்டும் வெறுப்புணர்வான போதனை என்றே நாம் நம்புகின்றோம்.இதேபோன்ற நிலைமைகளின் கீழ் சிலி, கொலம்பியா, குவாட்டமாலா, சல்வடோர், உருகுவே மற்றும் பிற நாடுகளிலிருந்து பலர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். இந்த வரலாற்று அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, எங்களைப் போல தமது சொந்த நாட்டில் மறுக்கப்பட்ட அமைதியையும் கௌரவத்தையும் இங்கு பெற்று தமது வாழ்க்கையை வாழ விரும்புகின்ற அவர்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை அங்கீகரிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதோடு தமிழ் அகதிகளுக்கு சர்வதேச விதியின் அடிப்படையில் அவர்களின் மனித உரிமைகளை மதித்து அகதி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கனேடிய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர். மேலும், கனேடிய மக்கள் தாம் தெரிவுசெய்துள்ள அரசாங்க அதிகாரிகளிடம் இந்த அகதிகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் என்று கேட்கவேண்டும் என்றும் இலத்தீன் அமெரிக்கக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.மேற்படி அறிக்கையில் கீழ்க்கண்ட அமைப்புகள் கையொப்பம் இட்டுள்ளன.Barrio NuevoCASA Salvador AllendeCELSAN (Canada El Salvador Action Network)Circulo Bolivariano Louis RielFrente de Resistencia de HondurasHands off Venezuela (HOV)Latin@sLatin American Solidarity NetworkLatin American Trade Unionist Coalition (LATUC)Victor Jara Cultural Group

19 ஆகஸ்ட் 2010

திருச்சியில் திமுக கோஷ்டி பூசல் வலுக்கிறது.



திருச்சியில் அமைச்சர் நேரு மற்றும் சிவா எம்.பி. ஆதரவாளர்களின் கோஷ்டி பூசல் வலுத்துவருகிறது.முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் 8ஆம் தேதி திருச்சி செல்கிறார். திருச்சியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முதல்வரின் வருகையையொட்டி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் முதல்வரை வரவேற்று பேனர்கள் வைத்து வருகின்றனர். நேற்று மாலை சிவா வீட்டுக்குச்செல்லும் வழியில் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலணியிலும் பேனர் வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் உட்பட 30 பேர் அங்கு வந்தனர். இவர்கள், பேனர் வைத்துக்கொண்டிருந்த சிவாவின் ஆதரவளர்களை தடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நேரு ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் சிவாவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் பாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வழக்கறிஞர் பாரதிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியபடியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இன்று வழக்கறிஞர் பாரதி, திருச்சி கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியிடம் புகார் மனு அளித்தார். தாக்குதல் நடத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய கோரியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி துணைமேயர் அன்பழகன், திமுக பகுதி செயலாளர் காஜாமலை விஜய், அமைச்சர் நேருவின் உதவியாளர் முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி கமிஷ்னர் பால்சாமி, வழக்கறிஞர் பாரதி மேல் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், மாநகராட்சி இடத்தில் அத்துமீறி சேதப்படுத்திவிட்டார்கள் என்று பாரதி மேல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
வழக்கறிஞர் பாரதியோ, திருச்சி மாநகர வழக்கறிஞர்கள் சங்கத்தினரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்.
திருச்சியில் திமுகவின் கோஷ்டி பூசல் வலுத்துவருவதால் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

மக்களுக்கென சேகரித்த நிதியுடன் சிறிடெலோ அமைப்பின் தலைவர் இந்தியா பயணம்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதாரப் பணிகளை பேணுவதற்கெனக் கூறி கூறி மோசடியான முறையில் நிதி சேகரித்த டெலோ அமைப்பின் தலைவரான நிமோ என்றழைக்கப்படும் நிர்மலன் முருகேசு, அந்த நிதியில் அவரது குடும்பத்தாருடன் அண்மையில் சமய வழிபாடுகளுக்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கின்றன.
நிமோவுடன் இந்தியா செல்வதற்காக அவரது மனைவி இங்கிலாந்திருந்து இலங்கை வந்த பின்னர; இருவரும் இந்தியா சென்றுள்ளதாக தெரியவருகிறது.சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக ஜேர்மனிய காவல்துறையினர் நிமோவை விசாரணை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, ஜேர்மனிய காவல்துறையினரின் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அவர் தற்போது இலங்கையில் வசித்து வருகிறார் அத்துடன் நிமோ ஜேர்மனியப் பிரஜாவுரிமைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மன்னாரில் படுகொலைச் சம்பவமொன்றுடன் சம்பந்தப்பட்ட இவர் ஜேர்மனிக்குச் தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரி ஜேர்மனிய பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டவராவார்
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வந்த இவர் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கான நிவாரணைப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி இவ்வாறு நிதி சேகரிப்பு மோசடியில் ஈடுபட்டுவந்தார்.

18 ஆகஸ்ட் 2010

இடம்பெயர் முகாம்களில் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள்?



வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் விடுதலைப் புலிகளின் போஸ்ரர்கள் ஒட்ட்பட்டிருந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் போஸ்ரர்கள் அங்குள்ள மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அச்சுறுத்தல் விடுப்பது போல கையெழுத்துக்களால் எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளனவாம். அவற்றில் "எங்கள் தேசியத் தலைவர் இறந்துவிடவில்லை. அவரை எவ்வாறு ஒருவரால் கொல்ல முடியும்? அவரை ஒருவராலுமே வெல்ல முடியாது. இராணுவம் பொய் கூறுகிறது. இராணுவத்துடன் தொடர்பு கொள்ளும் எவரும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். எங்கள் தலைவரின் கீழ் ஈழப் போராட்டம் தொடரும்" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மேற்படி முகாம்களில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்பட்டு வந்த சிலர் முகாம்களிலிருந்து தப்பியோடியுள்ளதால் முகாம் நிர்வாகிகளுக்கும், இராணுவத்துக்கும் மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார், வவுனியா யாழ்ப்பாண முகாம்களில் புலனாய்வுப் பிரிவுகள் பலவும் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல பிரிவுகள் முகாம்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற போதும்கூட, புலிகள் பற்றிப் புகைய ஆரம்பித்திருப்பது குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்களாம்.

17 ஆகஸ்ட் 2010

அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு.



நடிகை அசின் இலங்கை சென்றுவந்ததால் அவருக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது படத்தை வெளியிட்டால் எதிர்ப்புகள் வரும் என்று அவர் நடித்துள்ள படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் சக்தி சிதம்பரம் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
அசின் விவகாரத்தால் சிக்கலில் தவித்துக்கொண்டிருக்கிறது விஜய்யின் காவலன் படம். இந்தப்படத்தை வெளியிட பலரும் தயங்கிய வேளையில் பிரபல நிறுவனங்கள் கூட ஒதுங்கிவிட, இயக்குநரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் இப்படத்தை விலை பேசியுள்ளாராம்.
ஒரு பெரிய தொகையை முன் பணமாக கொடுத்து விட்டாராம்.
ஒட்டுமொத்தட் திரையுலகமும் அசினுக்கு எதிராக இருக்க இந்த இயக்குநரின் முடிவு பலரையும் திகைக்க வைத்துள்ளது.

ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்:



இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்கவுள்ளார். இது குறித்து கூறிய அவர் "அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'" என்றார். ஹம்பேர்க்கின் பிரஜையான கிருகரன் இப்போது ஜேர்மனியின் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவதாக ஜேர்மனி ஊடகங்களை மேற்கோள்காட்டி இலங்கை இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கிருகரன் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜேர்மன் அதிபர் (கண்சிலரின்)அங்கெலா மேர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் பிறந்த கிருகரன் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்று, அதன்பின் அங்கிருந்து ஹம்போர்க்கிற்கு குடிபெயர்ந்தார். விசேட கொள்கலன்களை உற்பத்திசெய்யும் நிறுவனமான பேர்ம் கப்பிட்டல் இன்ரர்மொடலின் உரிமையாளர் கிருகரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதவி விலகும் செனட்டர் அக்ஸெல் ஜெடஸ்கோவின் இடத்திற்கு 70 வயதான கரன் செனட்டராகவுள்ளார்.

சிங்களவர்கள் மீது யாழில் தாக்குதல்.



தென்னிலங்கையில் இருந்து வியாபார நோக்கத்திற்காக யாழ் சென்றிருந்த மூன்று சிங்களவர்கள் இனந்தெரியாதோரால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.மேற்படி சம்பவம் நேற்று மாலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண ஆரியபாதம் வீதி அம்பட்ட பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.
தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்லும் சிங்கள வர்த்தகர்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று 3 சிங்கள வர்த்தகர்களை, தலைக்கவசம் அணிந்து முகத்தை கறுப்பு துணியால் மறைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் அடங்கிய கும்பல் கத்திகளால் வெட்டி அவர்கள் வந்த லொறியினை எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கத்திக்குத்துக்கு உள்ளாகிய சிங்கள வர்த்தகர்களுள் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனைய இருவரும் பலத்த காயங்களோடு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிந்த நிலையில் இருந்த லொறியினை விரைந்து வந்த இராணுவத்தினர் அணைத்துவிட்டனர்.
தளபாட வியாபாரிகள் தம் விற்பனையை முடித்துவிட்டு லொறிக்குள் இருந்த சமயத்திலேயே இவ் இனந்தெரியாத கும்பல் அலவாங்கு, வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சிங்கள வர்த்தகர்களை தாக்கி, இனிமேல் இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் என்ற நோக்கில் வரக்கூடாது என சிங்களத்திலேயே சரளமாக திட்டியுமுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வீதிக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மிகவும் பதட்ட நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

16 ஆகஸ்ட் 2010

இளம் பெண்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு.




கிளிநொச்சிப் பெண்களுக்கு கூடிய சம்பளங்களுடன் சிறந்த வேலைவாய்ப்பைத் தருவதாகக் கூறி கண்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்று அப்பெண்களைக் கடத்த எடுத்த முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின்மீது சந்தேகம் கொண்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவன் மற்றும் சிறிதரன் ஆகியோர், இப்பெண்களைக் கூட்டிச்செல்வதற்காக கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு விஜயம் செய்து மேற்படி கடத்தலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தென்மாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக கண்டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த இளம்பெண்களைக் குறித்த நிறுவனம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சட்ட ரீதியான அனுமதி எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். இதற்கிடையில், இந்நிறுவனமானது கிளிநொச்சியில் இரவுபகலாக கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ தெரியாமல் இளம்பெண்களைக் கடத்தும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சிறிதரன் கூறியுள்ளார். எனவே இலங்கை அரச படைகளும் சேர்ந்தே இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தெளிவாகியுள்ளது. போரினால் தமது கணவன்மாரை அல்லது குடும்பத் தலைவர்களை இழந்துள்ள இளம் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் தருவதாக அவர்கள் வலை விரித்துள்ளார்கள்.இதேவேளை, தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் பெண் புலிகளை அரசாங்கமானது சிறைகளிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் சம்பளம் இன்றியே வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!!



வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதியூடாக பயணித்த மக்களே இவ்வாறு தாழையடி, செம்பியன் பற்று, கட்டைக்காடு போன்ற பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
புதிதாக ஒரே மாதிரியான குடியிருப்புக்களை கட்டி அங்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும், தம்மை இதுவரை காலமும் சொந்த இடமான அப்பகுதிகளில் குடியேற்றாது தடுத்துவந்த இராணுவமும், மகிந்த அரசும் தற்போது தமது இடங்களில் இவ்வாறான சிங்களக்குடியேற்றங்களை செய்துவருவதாக கவலையுடனும், கொதிப்புடனும் தெரிவித்தனர்.

15 ஆகஸ்ட் 2010

பிரச்சனையை கிளப்பும் ப்‌ரியாமணி.



பாசிஸ சிங்கள அரசின் ஊதியம் வாங்காத விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். சல்மான்கானின் சகவாசத்தால் இந்த தூதர் வேலையை அசினும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டது உலகுக்கே தெ‌ரியும். அப்படியிருக்க ப்‌ரியாமணியும் அந்த வலையில் விழ‌த் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.போக்க‌ரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெய‌ரில் இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட். அப்போதே வான்டட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ப்‌ரியாமணியை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ப்‌ரியாமணியிடம் கேட்டதற்கு, வான்டட் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால் உடனடியாக ஒப்புக் கொள்வேன். சல்லு பாயுடன் நடிக்க யாருக்குப் பிடிக்காது என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.யாருடைய படங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழர்கள் நினைக்கிறார்களோ அவர்கள்தான் இந்த நடிகைகளுக்கு பிடித்தமான நடிகர்கள்.திரையுலகமே ரெட் கார்ட்டை ரெடி பண்ணி வையுங்கள்.

எம்.வி.சன்.சி கப்பல் பயணிகளிடையே சகோதரனைத் தேடும் தமிழ் பெண்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருக்கும் பயணிகளிடையே அவருடைய சொந்தத் தம்பியைத் தேடி அலைகின்றார் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் பெண் ஒருவர்.
இவருடைய 24 வயதுச் சகோதரர் ஒருவரும் இப்படித்தான் பல மாதங்களுக்கு முன் கப்பல் ஒன்றில் புறப்பட்டு இருக்கின்றார். வாரத்தில் ஒரு முறை இருவரும் உரையாடி வந்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் எம்.வி.சன்.சி கப்பலில் வந்திருப்பவர்களில் அவரின் சகோதரரும் இருக்கக் கூடும் என்று இப்பெண் நம்புகின்றார். சகோதரனை அடையாளம் காண்கின்றமைக்கு கனேடிய தமிழ் காங்கிரஸினர் உதவி செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.
இப்பெண் 1996 ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்திருக்கின்றார்.ரொரன்ரோ நகரில் வாழ்கின்றார். இவரின் குடும்ப அங்கத்தவர்கள் தற்போதும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதுகாப்புக் கருதி இவருடைய பெயரை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பட்டினி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா.



உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்ககோரி, பட்டினி போராட்டம் நடத்தி, தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும் தங்கள் போராட்டங்களை கைவிடாது நெஞ்ச உறுதியுடன் தொடர்ந்த வழக்கறிஞர்கள் பாகத்சிங், ராசேந்திரன், பாரதி, எழிலரசு, ராசா, நடராசன் ஆகியோருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம். நேற்று 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றத்தில் நடை பெற்றது .
இந்த பொதுக்கூட்டத்தில் முதல் நிகழ்வாக செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க அஞ்சலியை செலுத்தி தியாகசூடரினை வழக்கறிஞர் சங்க செயலாளர் சினராஜா ஏற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தை திரு.த.செந்தில், நாம் தமிழர் கட்சி. தலைமையேற்று நடத்தினர் . இதில் பட்டினி போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களுக்குநினைவு பருசுகள் வழங்கப்பட்டது . நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமார் , ராஜகுரு , சீமான் ஆகியேர் நினைவு பருசுகள் வழங்கினார்கள் .இதனை தொடர்ந்து சமர்ப்பா இசை நிகழ்ச்சியும் , நாம் தமிழ ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை ,புலவர் தமிழ் கூத்தான் தமிழ் மணி , செந்தில், மு .கருப்பைய தமிழ் தேசிய விடுதலை இயக்கம் ஆகியோர் பாராட்டு உரை வழங்கினார்கள். ஏற்புரை வழக்கறிஞர் பாகத்சிங்
கூட்டத்தில் புலிகள் மீதான தடை சட்ட ஆணைக்கு விரோதமானது , சட்டத்திக்கு புறம்பான தடுப்பு சட்டம் புலிகள் மீதான தடைக்கு பொருந்து என்று பேசிய போது பலத்த கரவோசம் எழுப்பபட்டது . இப் பொதுக்கூட்டத்தில் 200 மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்
இப் பொதுகூட்டத்தை நாம் தமிழர் இயக்க தோழர்கள் மருது , பிரகாரன் ,சூசை, காந்தி . டானியல் மற்றும் நாகராஜ், சிவா, மதி ,படியராஜன், சண்முகம், ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

ஓமந்தையில் மனித மண்டையோடு, எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.



ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினராலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா, கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டார். இந்நிலையில் மேற்படி, எழும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

14 ஆகஸ்ட் 2010

சிதம்பரம், கருணாநிதிக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை.



இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி,கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை,தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார். அவர் மேலும் கூறியதாவது: சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில்,இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும், வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர். படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது. சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது.அந்த குழுவின் விசாரணையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்காது என்பதே கடந்தகால அனுபவம். இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது. இலங்கையில் தழினத்திற்கெதிராக நடைபெற்ற படுபாதகமான மனித உரிமை மீறலையும் அதன்வாயிலாக இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தமான நடவடிக்கையையும் கருத்திற்கொண்டு, DAP (Democratic Action Party) சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினர்களையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த ஒரு பிரத்தியேகக் குழு ஒன்றை அமைத்து, இலங்கைக்கெதிரான போர்க்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா.குழுவிற்கு ஆதரவாக நிற்கும். இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம். ராஜபக்சேவை போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, மலேசியாவில் வாழும் ஒருசில யாழ்ப்பாணத் தொழிலதிபர்கள் இலங்கையில் வளர்ச்சிப்பணி என்றப் போர்வையில் முதலீடு செய்ய செல்வதென்பது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு வெகுமதி தருவது போன்ற இனத்துரோகச் செயலாகும்.இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எனது கட்சியின் தேசியத் தலைவர்களை உள்ளடக்கிய இந்தச் சிறப்புக் குழு, இலங்கையில் மனித உரிமையை மீட்டெடுக்கப் பாடுபடுவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய ஈழவிடுதலைக் கோரிக்கைக்கு முக்கியத் தீர்வொன்றையும் காண்பதற்கு வழிவகுக்க பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கட்சியின் மூலமாக, இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவைகளோடும், அமெரிக்காவில் இயங்கி வரும் 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற (Tamils Against Genocide- TAG ) அமைப்போடும் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து,ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடும். அத்துடன் நான் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் பினாங்கு மாநிலத்தில், இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைக்கு, சர்வதேச போர்க்குற்றவியல் நீதி விசாரணைக் கோரும் தீர்மானமொன்றை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளோம். இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசினால் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும், குறிப்பாகக் கலாநிதிமாறனின் தயாரிப்பில் தற்போது வெளிவரவுள்ள “எந்திரன்” படத்தையும் புறக்கணிக்க மலேசியா முழுவதும் நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம். இனமானமுள்ள ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மற்றும் உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் மற்றைய தமிழின உறவுகளும் இப்போராட்டத்தில் பங்குபெற வேண்டுகிறேன். அப்பாவியான ஈழத்தமிழ் மக்களை, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசுக்கு துணை போனவர்களின் குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு, உலகில் இனமான உணச்சியுள்ள எந்தத் தமிழரும் துணைப்போகக்கூடாது என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இப்போராட்டத்தின் வெற்றி என்பது, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் உணர்வுக் காணிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

13 ஆகஸ்ட் 2010

பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள் இருவர் உட்பட 11 பேருக்கு விளக்கமறியல்!



ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹெரத் ,அஜித் குமார ஆகியோர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் 11 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காலியில் பொலிஸாருக்கும், தேசிய சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று பின்னேரம் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலையைக் கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பினர் காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இம்முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
காலி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரை தாக்கினர் என்கிற குற்றச்சாட்டின் பேரிலேயே இரு எம்.பிகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகதிகள் கப்பலினுள் கனேடிய கடற்படையினர் ஏறி, விசாரணை.



490 இலங்கை அகதிகளுடன் கனடாவை அடைந்துள்ள 'எம். வி. சன் சீ ' கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனேடியன் குளோப் அண்ட் மெயில் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் சீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் சீ கப்பல் தெரியப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்.கனடாவின் பொருளாதார வலயத்துக்குள் சென்றுள்ள இந்தக்கப்பல் இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடையும் எனவும், அக்கப்பல் குறித்து கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அக்கப்பலுக்கு அருகில் இருந்த மீன்பிடிக் கலத்தின் ஓட்டுநர் ஒருவரும் சன் சீ பற்றி கனேடியன் பிரஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தனது மீன்பிடிக்கலத்துக்குக் கிடைத்த வானொலி அலைகள் மூலம், அகதிகள் கப்பலினுள் பிரவேசித்துள்ள கனேடிய கடற்படையினர் அங்குள்ள அகதிகளை கேள்விகளால் துளைத்தெடுப்பதை அறியமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.எத்தனை பேருக்கு உடல்நிலை சரியில்லை, எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பெண்கள், எத்தனை சிறுவர்கள் போன்ற பத்தாயிரம் கேள்விகளை அவர்கள் கேட்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். இக்கேள்விகளுக்கு, "490 பேர் ஏறினார்கள், பின்னர் அது 480 ஆகியது, பின்னர் அது 450. ஒருவருமே இறக்கவில்லை. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை"போன்ற பதில்களை அகதிகள் அளித்துள்ளனர்.இது இவ்வாறிருக்க, இக்கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கப்பல்கள் கனடாவை நோக்கி வருவதை நிறுத்த கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்றன் பின்னொன்றாக பல கப்பல்கள் வரும் என்றும் அவர் கனடாவை எச்சரித்துள்ளாராம்.

12 ஆகஸ்ட் 2010

பரீட்சைக்குச் சென்ற மாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.


கண்டியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்ற வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுb பின்னர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி பெண்கள் உயர் நிலைப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சை ஆரம்பித்து 45 நிமிடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டார். இது விவரம் தெரிய வந்ததும், மாணவி மீட்கப்பட்டு, பரீட்சை ஆணையாளரின் விசேட அனுமதியின் பேரில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்.

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!



சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.
10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க… உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா? இந்தியாவையே வெளியே போக சொல்றியா…” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.
சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.
தி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

11 ஆகஸ்ட் 2010

துன்னாலைப் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் இளம் பெண் மீட்பு!



யாழ்ப்பாணம்,துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் நேற்றுக் காலையில் மயக்கம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இளம்பெண் ஒருவரின் அவலக் குரல் கேட்டுள்ளது.
எனினும் அப்பகுதி மக்கள் பயம் காரணமாக அங்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மயக்கமடைந்த நிலையில் இருந்த பிரஸ்தாப யுவதியை மீட்டு மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டார். யாழ். நகரத்தைச் சேர்ந்த பிரஸ்தாப யுவதி எவ்வாறு சம்பவ இடத்துக்குச் சென்றார் என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்!



சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார்.
அவருடைய ஆவணங்களில் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று பொய்யாக பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன போல் இருக்கின்றது. அவர் போலந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் சுமார் 05 வருடங்களுக்கு முன்தான் குடும்பத்தினருடன் இடையிடையே தொலைபேசியில் உரையாடி வந்திருக்கின்றார். பின் தொலைபேசி உரையாடலும் இடம்பெறவே இல்லை.
இந்நிலையில் அவர் குறித்து எந்தத் தகவல்களும் வருடக் கணக்காகவே கிடைக்கப் பெறாமல் இருந்தமையால் குடும்பத்தினர் அவர் இறந்து விட்டார் என்றே கடந்த மாதம் வரை முடிவெடுத்து இருந்தனர். அவரைப் பற்றி யோசித்தே அவரின் தாயார் நிரந்தர நோயாளி ஆகி விட்டார்.
இந்நிலையில் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், கட்டாருக்கான இலங்கையின் பிரதித் தூதுவருமான ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் விடுமுறையில் நாட்டுக்கு திரும்பி வந்திருந்த நிலையில் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருக்கின்றார்.
தர்மகுலசிங்கம் சிறந்த நிர்வாகி எனவும் மக்கள் தொண்டர் எனவும் பெயரை முத்திரை பதித்தவர். தர்மகுலசிங்கத்தை தயாபரனின் குடும்பத்தினர் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
அப்போது தயாபரனின் குடும்பத்தாரின் துன்பக் கதையை கவனமாக செவிமடுத்த தர்மகுலசிங்கம் என்ன நினைத்தாரோ தெரியாது... போலந்து நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அங்குள்ள சக இராஜதந்திரி ஒருவருடன் உரையாடினார்.
தயாபரன் குறித்து குடும்பத்தினரால் சொல்லப்பட்ட தகவல்களை அந்த இராஜதந்திரிக்கு ஒழுங்குமுறையாகக் கூறினார் . அந்த இராஜதந்திரியும் ஓரிரு நாட்களுக்குள் தகவல் வழங்குவார் என்று நண்பருக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் இவை நடந்து சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் தர்மகுலசிங்கத்தின் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது.
தயாபரன் என்று தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லி போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினர் தர்மகுலசிங்கத்துக்கு தகவல் வழங்கினர். அத்துடன் தயாபரனை இரவில் தொடர்பு கொள்ளக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் விபரங்களை அறிந்து கொண்ட தயாபரனின் குடும்பத்தினர் மகன் உயிருடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றமைக்காக அன்று இரவே குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு மேற்கொண்டனர். மறுமுனையில் ஒருவரின் குரல் கேட்டது.
தயாபரனின் குடும்பத்தினருடைய காதுகளை நம்பவே முடியவில்லை. ஆம்.அந்நபர் அவர்களுடைய தயாபரன்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். அவர் போலந்தின் தலைநகர் பகுதியில் நலிந்தவர்களுக்கான இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்.
அவரை இலங்கைக்கு கொண்டு வருகின்றமைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, போலந்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர் திரும்பி வரும் பட்சத்தில் தாயின் நோய் ஒருவேளை குணமாகி விடும் என்று வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி கனகபுரத்தில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு.



கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண் ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக் குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவரு வதாவது:கனகபுரம் கோழிப்பண்ணையில் மீள் குடியமர்ந்த இந்த நபர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவரைக் காணாத நிலையில் நேற்றைய தினம் கிணற்றில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலத்தை மீட்ட பொலிஸார் மரண விசாரணைகளுக்காக வவுனியா மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 ஆகஸ்ட் 2010

தமிழரின் அவலங்களை அறிய ஆஸி அரசு முயலவில்லை! வேட்பாளரான யாழ்ப்பாணத் தமிழ் பெண் விமர்சனம்.



ஈழத் தமிழர்களின் பேரவலங்களைப் புரிந்து கொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்வரும் ஆஸ்திரேலிய செனற் சபை தேர்தலில் கிறீன் கட்சியின் சார்பாகப் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் பிராமி ஜெகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
லேபர் கட்சியின் சில எம்.பி மார் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளார்கள் தான்.
ஆனால் ஈழத் தமிழர்களின் பேரவலங்களை விளங்கிக் கொள்வதற்கு லேபர் கட்சி போதுமான முயற்சிகளை எடுக்கவே இல்லை. ஆகவேதான் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை ஆஸி அரசினால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
ஆகவேதான் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வரும் ஈழ அகதிகள் விடயத்தில் ஆஸி அரசு கடும் போக்கைக் கைக்கொள்கின்றது. இது அக்கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தால் சரி வரப் போகின்ற விடயம் அல்ல.
இலங்கை அரசினால் யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்த சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஆஸ்திரேலியா உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசுக்கு பாரதூரமான நெருக்குவாரங்களைக் கொடுக்க வேண்டும்.
இவையே ஈழத் தமிழர்கள் இலங்கையில் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகின்றமைக்கு உதவிகளாக அமையும். இலங்கையில் சமாதானம் கிடைக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு முதலில் நீதி கிடைக்க வேண்டும்

என்றார் அவர்.

09 ஆகஸ்ட் 2010

மாயாவுக்கு எதிரான சதியில் இலங்கை அரசு!



உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளில் ஒருவராகவே மாயா இலங்கை அரசினால் பார்க்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் புலிகளுக்கிடையில் மோதலென பி,பி,சி,தவறான செய்தி.


நோர்வே ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் காரணமாக ஏற்பட்ட சம்பவத்தை பி.பி.சி சிங்கள சேவையானது மிகப்பெரிது படுத்தி தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களிடையே சண்டை என்பதாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக ஒஸ்லோ தமிழர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பான நோர்வே ஊடகங்கள் போலீசாரின் சரியான அறிக்கையுடன் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், பி.பி.சி இல் இச்செய்தி பொருத்தமற்ற விதத்தில் அவை தனிப்படுத்திக்காட்டப்பட்டது. ஆனால் தமது கற்பனைகளுடன் தீங்கு விளைவிக்கும் விதமாக செய்தியை வெளியிட்டுள்ள பி.பி.சி தனது செய்திக்கு நோர்வே ஊடகங்களையும், போலீசாரையும் மேற்கோள் காட்டியுள்ளது. உண்ணாவிரதமிருந்த பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டார் என்ற பொய்யான செய்தியை வெளியிட்ட இரு பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவ்வழக்கில் வெற்றியும் கிடைத்துள்ள நிலையில் பி.பி.சி தற்போது பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது.மேற்படி சிறிய சம்பவத்தை நெடியவன் மற்றும் கே.பி ஆகியோரின் குழுக்களிடையே சண்டையென கற்பனை பண்ணி செய்தி வெளியிட்டமை ஆழ்ந்து ஆராயப்படவேண்டிய ஒன்று என்று நோர்வேத் தமிழர்கள் கூறியுள்ளதோடு, மேற்படி 'சண்டை' சனிக்கிழமை இரவு கிளம்பியதாகவும், காயப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சோடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையே நடந்துள்ளது.காயப்பட்ட நபர் ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை உறுப்பினர் எனக் கூறுவதன் மூலம், தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவாகியுள்ள இந்த பேரவையானது புலிகளுக்குச் சார்பானது எனக் காண்பிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் முயற்சிக்கின்றது என்று ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவைத் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா கூறினார்.இதேவேளை ஈழத் தமிழர்களின் நோர்வே பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட முன்னரே நெடியவன் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார் என்பதை நோர்வே அதிகாரிகள் நன்கு அறிவர். இவ்வாறாக பி.பி.சி ஆனது பொய்யான செய்திகளை வெளியிடுவது, போராட்டத்துக்கு எதிராக எழுதுபவர்கள் தமது எழுத்துக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான ஆதாரத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறது என்பதையும் தமிழ் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.உண்மையில் இச்சம்பவமானது தமிழர் ஒருவர் தனது விலையுயர்ந்த காரைத் தாம் விரும்பிய ஒரு இடத்தில் நிறுத்த விரும்பியதாலேயே ஏற்பட்டது. கோவில் திருவிழா நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த உதவிய தொண்டர்கள் இதை அனுமதிக்காத காரணத்தாலேயே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான சிரேஷ்ட தொண்டர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. காரில் இருந்த மூவரும் கூட தாக்கப்பட்டனர்.மேற்படி மூவரையும் ஒஸ்லோ போலீஸ் கைது செய்துள்ளது. இவர்களுக்கும் காயம் ஏற்பட்டிருந்தபோதும், சிறிய காயங்கள் மட்டுமே. ஒரு தொண்டருக்கு மட்டும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டதல் அவர் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 அளவில் நடந்துள்ளது.ஆனால் இச்சம்பவங்கள் அனைத்தையும் பி.பி.சி சிங்கள சேவை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளது.

நடிகைகள் இலங்கைக்கு போக வேண்டாம்: சத்தியராஜ்.



எந்த நடிகையும் இலங்கைக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் சத்தியராஜ் பேசினார்.
ஆயிரம் விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ், ஆயிரம் விளக்கு படத்தில் நடித்துள்ள கதாநாயகி சானா கான், இந்திக்கு போய்விடுவார்.
இப்போது தமிழில் நடித்த நடிகைகள் எல்லாம் இந்திக்கு போகிறார்கள். நீங்கள் இந்திக்கு போங்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் போங்கள். ஆனால் இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்.
இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள். இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம். இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமிதாப் பச்சனை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அவர் இலங்கை பயணத்தை ரத்து செய்தார். அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

புலிகள் ஆதரவுக் குழுக்களிடையே நோர்வேயில் மோதல்! ஆறு பேர் காயம், மூவர் கைது!



நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு தமிழ் குழுக்கள் இடையே மோதலில் ஈடுபட்டவர்களில் ஆறு பேர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் மூன்று பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கோவில் திருவிழா ஒன்று இடம்பெற்றபோது சனிக்கிழமை இரவு நெடியவன் அணிக்கும், கே.பி அணிக்கும் இடையில் இந்த மோதல் வெடித்திருக்கின்றது.
ஈழத் தமிழருக்கான நோர்வே பேரவையின் உறுப்பினரும்-நெடியவன் அணியைச் சேர்ந்தவருமான சிவ கணேஸ் வடிவேலு என்பவர் காயம் அடைந்தவர்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். நோர்வே பொலிஸார் இம்மோதல் சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.இம்மோதல் சம்பந்தப்பட்ட செய்தி பி.பி.சி செய்திச் சேவையில் பிரசுரமானமை குறிப்பிடத் தக்கது.

இலங்கை அகதிகள் 219 பேருடன் கனடாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கப்பல் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளது.


இலங்கை அகதிகள் 219 பேருடன் கனடாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து நாட்டுக் கப்பலான எம்.வீ-சன் சீ அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் ஜே. கிரௌசி தெரிவித்தார். தற்போது இக்கப்பல் கனடாவின் வன்கூவர் நகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இக்கப்பல் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, சன் சீ கப்பல் தொடர்பில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் பலருக்கும் பல தகவல்கள் தெரிந்திருந்தும் அத்தகவல்களை வெளிப்படுத்த அவர்கள் மறுப்பதாக அமெரிக்க இணையத்தளத்தில் செய்திகள் வந்துள்ளன.
தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு இலங்கைத்தமிழருக்கு அக்கப்பல் குறித்த விடயங்கள் தெரிந்துள்ளதாகவும், ஆனால் அக்கப்பலில் குறித்த தமிழரின் உறவினர்கள் எவருமே பயணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசாங்கம் கூறுவதுபோல அக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வந்தாலும்கூட, அவர்கள் தம்மைப் புலிகளாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்றும் அத்தமிழர் குறிப்பிட்டுள்ளார்.

08 ஆகஸ்ட் 2010

செஞ்சோலை மாணவி சாலினி சுகவீனம் காரணமாக மரணம்!




செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர்ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார். மூன்று வயதாக இருக்கும் போது 1994ஆம் ஆண்டு செஞ்சோலையில் இணைந்து கொண்ட சாளினி தனது இறுதிக்காலம் வரையில் செஞ்சோலையிலேயே வாழ்ந்துவந்தார். செஞ்சோலை மாணவிகளிடையே கல்வி, கலை மற்றும் விளையாட்டில் சாளினி முன்னணியில் விளங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த மாணவி போர் மற்றும் அதன் பின்னான நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள டொன்பொஸ்கோ பெண்கள் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற அவர் போரின் பின்னர் தான் மீண்டும் அனாதையாக்கப்பட்டதாக சக மாணவர்களிடம் மிகுந்த கவலை வெளியிட்டதாக அவருடன் பராமரிக்கப்பட்டு வருகின்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்.போரின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலையில் பராமரிக்கப்பட்டுவந்த குழந்தைகள் முதல் மாணவர்கள் வரையான நூற்றுக்கணக்கான மாணவர்கள் சரியான பராமரிப்பின்மை, உரிய கவனிப்பின்மை உட்பட்ட நெருக்கடிகளால் மிகுந்த உளவியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தம்மை ஆற்றுப்படுத்த யாராவது முன்வருவார்களா? என்ற ஏக்கம் அந்த மாணவர்களிடம் அதிகரித்துள்ளமையை சாளினியின் பிரிவு வெளிப்படுத்துகின்றது என்று காந்தரூபன் அறிவுச் சோலையின் மூத்த மாணவன் ஒருவர் தெரிவித்தார்.

சீமான் கைதினைக் கண்டித்து மதுரையில் தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.



நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசியப்பாதுகப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து மதுரையில் வருகிற ஆகஸ்டு 10 அன்று பெரும்பான்மையான தமிழ் அமைப்புகள் முதல் முறையாக ஒன்றாகப் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இடம் : ஜான்சி ராணி பூங்கா ,மதுரை
நேரம் : மாலை 5 மணி
பங்கேற்போர் : தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.தமிழ்த்தேசியப் பொதுவுடைமைக் கட்சி,தமிழர் தேசிய இயக்கம்,நாம் தமிழர் கட்சி,மறுமலர்ச்சி தி.மு.க ,பெரியார் தி.க உள்ளிட்ட தோழமை அமைப்புகள்.

07 ஆகஸ்ட் 2010

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் இளைஞன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்.


மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் இளைஞன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகமட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலுள்ள கடுக்காமுனை எனும் கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவிமட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவனால் கடத்திச்செல்வப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பின்னர் அம்மாணவியை மட்டக்களப்பில் விட்டு விட்டுகுறிப்பிட்ட இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஐ.நா முன்றலில் 20 ஆம் திகதி மாபெரும் தமிழர்கள் எழுச்சிப் போராட்டம்!



ஈழத் தமிழருக்காக நீதி கோரி சிவந்தன் நடத்தும் மனித நேய நடைப் பயணத்தின் நிறைவாக எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.நா முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கையும்,ஐ.நா அதிகாரிகளுக்கு ஈழத் தமிழர் சார்பில் எழுத்துமூல கோரிக்கைகளை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளன.
சிவந்தன் இன்று 15ஆவது நாளாக இப்பயணத்தைத் தொடர்கின்றார். நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்தார்.
இன்று காலையில் மீண்டும் நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் கடந்துள்ளார். Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து செல்கின்றனர். நேற்று இத்தாலியில் இருந்து 7 பேர் இணைந்து கொண்டனர். பிரான்ஸில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர்.
Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருக்கின்றார்கள். இந்த மக்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது.
அவர்களில் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளாது. பாரிஸில் இருந்து 129 கிலோமீற்றர்கள் தூரம் நடந்துள்ள சிவந்தன், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

06 ஆகஸ்ட் 2010

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பாலகுமார் உயிருடன் உள்ளாரா?



தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் படையினரிடம் சரணடைந்ததை நிரூபிக்கப்படக் கூடிய புகைப்பட ஆதாரம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதிலிருந்து பாலகுமார் அவர்கள் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 11,686 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 737 போ் தீவிரமாக செயற்பட்ட போராளிகள் புலன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான க.வே.பாலகுமார் மற்றும் யோகரட்ணம் யோகி ஆகியோர் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை எனவும், அவர்களின் மனைவியர் விதவைகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க தகுதியுடையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த புலிகளின் இரு சிரேஷ்ட தலைவர்கள் இருவரும் போரின்போது கொல்லப்பட்டதாக அமைச்சர் அவர்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
ஆனால் இப் புகைப்படத்தின் மூலம் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் கடந்த வருடம் மே மாதம் 17 ம் திகதி படையினரிடம் சரணடைந்தது நிரூபணமாகியுள்ளது தெளிவாகின்றது. அத்துடன் அமைச்சரின் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதும் வெளிப்படையாக அறியவந்துள்ளது.
இப்புகைப்படத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் பாலகுமார் அவர்கள், வலது முழங்கையில் காயத்துடனும் மகனுடன் இராணுவ நடமாட்டங்கள் காணப்படும் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

சைக்கிள் விபத்தில் வயோதிபர் மரணம்!



மணற்காட்டில் சைக்கிள் ஒன்றில் வீதியால் சென்று கொண்டிருந்த வயோதிபர் ஒருவரை இன்னுமொரு சைக்கிளில் வந்தவர் மோதிய விபத்தில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மணற்காடு பெரியபட்டியில் இருந்து குடத்தனைக்குச் சென்று கொண்டிருந்த 60 வயதான சந்தியா கிறிஸ்தோபிள்ளை என்பவரை மற்றுமொரு சைக்கிள் மோதியதில் ஆழமான கிடங்கில் விழுந்த அவர் மரணமடைந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிவான் திருமதி.ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை யுவதிக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு.




இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கிய 17 வயது யுவதியான ரிப்கா பாரி தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் வகையில் ஒஹையோ மாநில நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
தனது இஸ்லாமிய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய இந்த யுவதியை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு அவரின் பெற்றோர்கள் முயற்சித்தனர். அதேவேளை இது சாத்தியமற்றது என அறிவிக்கக் கோரி ரிப்கா பாரியின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரிப்காவுக்கு 18 வயது பூர்த்தியடைவதால் குடும்பத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என நீதவான் மேரி குட்ரிச் தீர்ப்பளித்தார். அதேவேளை, இலங்கைக்குத் திரும்புவது ரிப்காவின் நலன்களுக்கு மிக உகந்ததாக இருக்காது எனவும் நீதிவான் கூறினார்.
ரிப்கா பாரி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். எனினும்,; கர்ப்பப்பை புற்றுநோய்குள்ளாகியுள்ள ரிப்கா, தனது சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கிருப்பதற்கு விசேட அனுமதி கோரும் மனுவை அவரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்வதற்கு இத்தீர்ப்பின் மூலம சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

05 ஆகஸ்ட் 2010

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த பிரபா கணேசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்: மனோ கணேசன் அறிக்கை!



எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், தாம் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடைநிறுத்துமாறு கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரனுக்கு தாம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரபா கணேசன் அனுமதி கோரியதாகவும் அதற்கு அனுமதியளித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது அரசாங்கத்தில் இணைவதற்கோ தாம் அவருக்கு அனுமதியளிக்கவில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை
பிரபா கணேசன் எமது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்:

ஜனநாயக மக்கள் முன்னணி

தலைவர் மனோ கணேசன்,
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்துவரும் நேர்மையான அரசியல் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்துகொண்டதன் மூலம் அவர் என் முதுகில் குத்தியுள்ளார்.
எமது கட்சியின் அடிப்படைச் சட்டம், கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் உடன்பாட்டுடன் பிரபா கணேசன் எம்பியை தமது கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது. உத்தேச உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான எமது கட்சியின் ஆலோசனைகளை அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் வழங்குவதற்கு அலரி மாளிகைக்கு செல்லவிருப்பதாக பிரபா கணேசன் நேற்று காலை தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார். எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதியையோ அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையோ சந்திப்பதற்கு எமக்கு இருக்கின்ற உரிமை அடிப்படையில் இதற்கான ஒப்புதலை நான் அவருக்கு வழங்கியிருந்தேன்.
ஆனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னுமொரு மலையக பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, பாராளுமன்றத்திலே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசனின் செயற்பாடு எமது கட்சி கொள்கைக்கு திட்டவட்டமாக முரணானதாகும்.
இதன் மூலம் பிரபா கணேசன் எம்பி, கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போன நிலையிலும் நான் மனம் வருந்தவில்லை. ஆனால் இன்று நான் நாட்டில் இல்லாதவேளையில் அரசுடன் இணைந்து கொண்டு எனது முதுகில் குத்தியதன் மூலம் என் மனதை பிரபா கணேசன் எம்பி மிகவும் மோசமான முறையிலே வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்.
பெரும்பான்மை கட்சிகளுடனான முரண்பாட்டிற்கு ஒரே தீர்வு தமிழ் பேசும் கட்சிகளும், முற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்வதாகும். இதுவே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது கட்சிக்கு கடந்த தேர்தலுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை காரணமாக வைத்துக்கொண்டு அரசுடன் இணைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சுயநலவாத துரோகமாகும்.
தமிழ் மக்களை வரலாறு காணாத துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கக்கூடிய இந்த அரசாங்கத்துடன் பிரபா கணேசன் இணைந்து கொண்டுள்ளார் என்ற செய்தி எனது நெஞ்சில் இடியாக விழுந்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலிருந்தும் பிரபா கணேசனின் அங்கத்துவம் உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது.
அவருடன் எந்தவித தொடர்புகளை பேணவேண்டாம் என எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், அலுவலர்களையும் கோருகின்றேன்.

களனி பிரதேச செயலகம் முற்றுகை.


பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக களனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 3000 பேர் வரையிலான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் களனிப் பிரதேச செயலகத்தை இன்று காலையில் முற்றுகை இட்டார்கள்.
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மரம் ஒன்றில் கட்டிப் போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு பூராவும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் எதிர்ப்பு நடவடிக்கைக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அப்போராட்டத்தின் ஒரு அம்சமாகவே இம்முற்றுகை இடம்பெற்றது. களனிப் பிரதேச செயலகத்தில் இருந்த மாமரம் ஒன்றிலேயே அந்தச் சமுர்த்தி உத்தியோகத்தர் கட்டிப் போடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலகத்துக்குள் பலாத்காரமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசினார்கள். தற்போது களனிப் பிரதேசத்தில் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பலத்த கண்டனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேர்வினுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

தமிழினியை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதி மன்று தெரிவிப்பு.


தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் தமிழினி வவுனியாவில் வைத்து குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக குற்றப்புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

04 ஆகஸ்ட் 2010

தாக்க வந்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மாவோயிஸ்டுகள்.

சத்தீஸ்கார் மாநிலம் தண்டவாடா மாவட்டம் கிரன்துல் அருகே உள்ள கோமியபால் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 போலீசார் பலியாகி உள்ளதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தண்டேவாடாவில் இன்று அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரத்துக்கு மேல் சண்டையில் 6 வீரர்கள் பலியாகினர்.
மொத்தம் 75 வீரர்கள் சென்றனர். அவர்களில் 25 பேர் மட்டும் முகாமுக்கு திரும்பியுள்ளனர். 50 வீரர்களை காணவில்லை. தண்டேவாடாவில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக எஞ்சியிருக்கும் வீரர்கள் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தமிழீழம் கனவல்ல,அது தோற்றுப் போக எம் காவல் தெய்வங்கள் அனுமதிக்கமாட்டார்கள்.




தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.
மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.
அவர்களது உடலில் உயிரைத் தவிர அவர்களுக்கென்று எதுவுமே மிச்சமாக இல்லை. அவர்களது அவலங்களை அப்படியே வெளிக் கொணர்ந்து உலகின் மனச்சாட்சியைத் தட்டும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆரம்பித்துள்ளது.
அழுவதற்கோ, ஆறுதல்படுத்துவதற்கோ, ஆதரவுக் கரம் நீட்டுவதற்கோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவர்களது கல்லறைகளில் கூட கண்விழிக்க அனுமதியின்றித் தவிக்கின்றார்கள்.இத்தனை அவலங்கள் நிறைந்த இன்றைய தாயக பூமி இங்கிருந்து செல்லும் சில ஈனத் தமிழர்களுக்கு சொர்க்க பூமியாகக் காட்சி தருவதுதான் மிகப் பெரும் கொடுமையாக உள்ளது. விபச்சாரிகள் தப்பு, சரி என்று எதையுமே கணக்கிடுவதில்லை என்பது போலவே, இவர்களுக்கும் அந்த மண்ணின் அவலங்களும், அந்த மக்கள் மீது நடாத்தப்படும் அசிங்கங்களும், அவமானங்களும் துடைத்தெறியக்கூடிய புனிதங்களாகத் தோன்றுகின்றன.
இவர்களுக்காகவென்றே சிங்கள தேசமும், அதன் கூலிக் குழுக்களும் செய்து கொடுக்கும் வசதிகளும், வாய்ப்புக்களும் இவர்களுக்கு தமிழீழம் தற்போது தேன் பாயும் பூமியாகக் காட்சி தருகின்றது. மனிதன் இழக்கக் கூடாதது மானம், இழக்க முடியாதது சுய கௌரவம். இந்த இரண்டையும் இழந்துவிட்ட இரண்டும் கெட்டான்களுக்கு சிங்களம் வரம் தரும் கர்ப்பக்கிருகமாகக் காட்சி தருவதில் வியப்புக் கொள்ள ஒன்றும் இல்லை.
தமிழீழம் சூறையாடப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழம் திணறுகின்றது. கிழக்கைப் போல், வவுனியா போல் வன்னியும், யாழ்ப்பாணமும் சிங்கள மயப்படுத்தப்படுவதால், அங்கும் தமிழர்கள் சிறுபான்மை இனமாக அவலப்படும் நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
அச்சப்படுத்தப்படும், வாழ்வுரிமை மறுக்கப்படும் தமிழர்கள் கடல் கடந்து தப்பிச் செல்வதைக் கறியாகக் கொண்டிருப்பதால், சிங்களத்தின் ‘சிங்கள தீப’ கனவு நனவாகும் நிலையை அடைந்து வருகின்றது.
இந்த வருடங்களில் உல்லாசப் பயணமாக அந்தத் தமிழ் மண்ணைத் தரிசித்தவர்கள், இன்னமும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் ‘ஆயி போவன்’ சொல்லியே தரை இறங்க வேண்டிய அவலத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்.
சின்னச் சின்ன ஆசைகளோடு சிறிலங்கா சென்று திரும்பும் எமது உறவுகள், எம் இனத்தின் எதிர்காலத்தையும் சேர்த்தே காவு கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முழுக்குப் போடும் நம்மவர்கள், இன்றும் விடுதலை வேட்கையுடன் தமிழீழ மண்ணும், மக்களும், புலம்பெயர் தமிழர்களும் யாக வேள்வி நடாத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனி ஒரு மனிதனாகத் தனக்கான சுமையுடன் சிவந்தன் என்ற தமிழீழ விடுதலைத் தீப்பொறி லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கித் தனது போர்ப் பயணத்தைத் தொடர்ந்த வருகின்றது. பத்து நாட்களாக நடந்து பாரிஸ் நகரின் ஊடாகப் பயணப்பட்டுள்ள இந்த அக்கினிக் குஞ்சு புலம்பெயர் தேசத்தின் தமிழ் மக்களது திறக்காத மனக் கதவுகளை உடைத்துத் தமிழீழக் கனவை விதைக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்தின் பிடியிலிருந்து தமிழீழத்தை முற்றாக மீட்டெடுக்கும் புதிய போர்க் களத்தைப் புயலாக மாற்றப் போகின்றது.
இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தோற்றுப்போகவில்லை. அது தோற்றுப்போக அந்த மண்ணுக்காய்ப் போராடி மாவீரராகிப்போன எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டாhகள்.தமிழீழம் கனவல்ல…
எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள தேசியக் கடமைகளை நாங்கள் சுகந்தனைப் போல் தூய மனத்துடன் சுமந்து சென்றால்,
தமிழீழம் கனவல்ல!


ஈழநாடு.

03 ஆகஸ்ட் 2010

சிறிலங்காவின் நடவடிக்கையில் முன்னேற்றமில்லை.


போருக்கு பிந்திய இலங்கையில், சாதாரணமாக எவரேனும் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய அளவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை 2008 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திகாரி தெரிவித்தார்.
அவர் இலங்கை நிலைவரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அப்பேட்டியில் முக்கியமாக ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழ்நிலை இலங்கையில்உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

சிவந்தனின் மனிதநேய நடைபயணம் பதினோராவது நாள்.


ஈழத் தமிழருக்கு நீதி கோரி ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடைப் பயணத்தை மேற்கொண்டு வரும் சிவந்தன் 11 ஆவது நாளாக இன்று பிரான்ஸின் லாக்கூர்னோவ், ஓபல்லியே ஆகிய நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார்,
இன்று காலையில் செவ்றோனில் இருந்து புறப்பட்ட சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ் ஒபவில்லியே ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றார்கள்.
பாரிஸ் நகரசபையை இவர்கள் சென்றடைந்த பின்னர் அங்கு நகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பும், மாபெரும் மக்கள் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளன. இதனையடுத்து சுமார் 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் தொடர்ந்து முன்னேறுவார்.

தாக்குதல்தாரிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.


வெற்றி எப் எம் வானொலியின் கொழும்பு அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பொலிஸார் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் தாக்குதல் குறித்து எதிர்வரும் 23 ஆம் திகதி அறிக்கை ஒன்றை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு வந்திருந்தமையால் அவர்களை இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என்று பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர்.

02 ஆகஸ்ட் 2010

அடுத்தமாதம் மகிந்த ஐ.நாவால் விசாரணைக்கு உள்ளாகலாம்?


இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்ந்து ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விசாரணை செய்யும் என்று சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்கு வருகை தர முடியாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் என்ன செய்வது? என்று திண்டாடிக் கொண்டிருந்த நிபுணர் குழுவுக்கு துரும்புச் சீட்டு ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
அதாவது அடுத்த மாதம் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் ஐ.நா பொதுச்சபை கூடுகிறது. இதைச் சரியான தருணமாகப் பயன்படுத்த நிபுணர் குழு முடிவெடுத்துள்ளது. இப்பொதுச் சபைக் கூட்ட விவாதத்தில் பங்குகொள்வோர் பட்டியலில் மஹிந்தரின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தற்செயலாக நடந்திருக்கும் விடயம் அல்ல என்பது வெளிப்படை.
மஹிந்தர் இக்கூட்டத்துக்கு வருகை தருவார் என்றும் அப்போது அவரை விசாரணை செய்யலாம் என்றும் ஐ.நா உயர்மட்டத்தினர் ஊகித்து இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைக்கு அடுத்த மாதம் பிள்ளையார் சுழி போட இருக்கின்றார்கள் என்பது தெரிய வருகிறது.

பலாலி விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் நினைவு நாள்.


















02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.
அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)
பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.
தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.
இந்தக் கரும்புலித் தாக்குதலில்கரும்புலி கப்டன் திருகரும்புலி மேஜர் திலகன்கரும்புலி லெப். ரங்கன்கரும்புலி கப்டன் நவரட்ணம்கரும்புலி மேஜர் ஜெயம்
ஆகிய கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

01 ஆகஸ்ட் 2010

போர் குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும்.-அமெரிக்கா.


போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது:சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாஸிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாஸிர் மீதான குற்றச் சாட்டானது தமது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேஸியன் கூறியுள்ளார்.மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்த கருத்து விசனத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆச்சரியம் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் கருத்தையா கிரேஸியன் கொண்டிருக்கிறார் என்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைஸிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.இல்லை, சூடான் தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைக்கு அமெரிக்கா மிகத் தெளிவான முறையில் ஒன்றுபட்டு ஆதரவளித் துள்ளது என்று சூசன்ரைஸ் கூறியுள்ளார். மறுபுறத்தில் சூடான் தொடர்பாக ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக புயல் எழுந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின் றனர். விடுமுறையின்றி சமூகமளிக்காத போராட்டம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.இது தொடர்பாக ஐ.நா. விலுள்ள அமெரிக்க தூதரகத்தின் குறிப்பேடு வருமாறு:இன்னர்சிற்றி பிரஸ்: நீங்கள் ஒரு செய்தி யைக் கூறுவதாகவும் ஸ்கொட் கிரேசியன் மற்றொரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஓமர்அல் பாசில் மீதான குற்றச்சாட்டானது அதாவது இனப்படு கொலைக்காக ஜனாதிபதி பாஸிர் குற்றஞ்சாட் டப்பட்டிருப்பது தனது பணியை மேலும் கடினமானதாக மாற்றியுள்ளதாக ஸ்கொட் கிரேசியன் அண்மையில் தெரிவித்திருந்தமை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.விடுமுறையின்றி சமூகமளிக்காமை நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நான் ஊகிக்கிறேன். சூடான் தொடர்பான கொள் கையை நிர்வாகம் இழந்து வருவதை விடு முறையின்றி சமூகமளிக்காமை விடயம் வெளிப்படுத்துவதாக ஊகிக்கிறேன். இந்த விமர்சனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? டார்பர் மற்றும் தென் சூடான் தொடர்பாக ஜனாதிபதி பாஸிர் மீது அழுத்தம் கொடுக்கும் விடயத்தில் ஒரேநிலைப்பாட்டில் நிர்வாகம் முன்னகர்வை மேற்கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது சிலர் கூறுவதுபோன்று இரு வேறுபட்ட செய்திகளா?தூதுவர் ரைஸ்: இல்லை, சூடான் தொடர்பாக அமெரிக்காவானது ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைக்கு உறுதியான ஆதரவாகவுள்ளது. இந்தக் கொள்கையானது வெளிவிவகார அமைச்சர் கிளின்டன்,மரான் மற்றும் கிரேஸி யன் உட்பட ஏனையோரால் வடிவமைக்கப் பட்ட பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட தாகும். விரிவான சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அழுத்தியுரைத்திருக்கிறோம். அதேவேளை, டார்பூரின் பாதுகாப்பு நிலைவரம் மோசமடை வது தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந் திருக்கிறோம்.இன்னர்சிற்றி பிரஸ்: இனப்படுகொலைக் குற்றச்சாட்டு உங்கள் பணியை கடினமான தாக்குகிறதா? உங்கள் கொள்கையைப் பின்பற்றுபவர் ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார். உண்மையாக அவர் அவ்வாறு கூறினாரா?சூசன்ரைஸ்: ஏனையோர் என்ன கூறியுள் ளனர் என்பது பற்றிக் கூறுவதற்கான நிலைமை யில் நான் இல்லை. சுருக்கமாகக் கூறினால் டார்பரிலும் ஏனைய இடங்களிலும் இடம் பெறும் போர்க் குற்றங்கள்,இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு என்பன தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.