ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு ஒன்றை அமைக்கும் முயற்சியில் பிரித்தானிய தழிழர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இக்குழுவை அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளிற்காக பிரித்தானிய தமிழர் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
கலந்துரையாடல்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சி
கலந்து கொள்வோர் :
Ø கலாநிதி . செயிட் கமல் – ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்.
Ø திரு. லீ ஸ்கொட் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் , தலைவர் – தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு.
இடம் : Gearies Junior School, Gants Hill Crescent
Gants Hill, Ilford, IG2 6TU
காலம் : 11 November 2011 7 P.M
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை அமைக்கும் முயற்சியின் ஆரம்பமாக பிரித்தானிய தமிழ் கன்ஸ்வேட்டிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலில் போர்க்குற்ற விசாரனைக்கான அழுத்தங்கள் , மற்றும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆற்றக்கூடிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
திரு லீஸ் கொட் அவர்களின் தலைமையிலான தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆற்றும் பணிகள் தொடர்பாகவும் , இனிவரும் காலங்களின் எம் முன்னே உள்ள பணிகள் தொடர்பாகவும் திரு லீ அவர்கள் விளக்கமளிப்பார்.
நாம் எவ்வாறு இப்பணிகளில் இணையப்போகின்றோம் எனவும் ஆராயப்படும் எமக்காக இப்பணிகளை கொண்டு செல்லும் எமது நண்பர்களை ஊக்கப்படுத்த நாம் அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக