சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலையின் பிரதம குற்றவாளியான சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு எதிராக நாளை (02) மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெவுள்ளதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கும் பொருட்டு வருகைதரவுள்ள பிரித்தானியாவின் புறநகர் பகுதிகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் சிறப்பு பேரூந்துகளை ஒழுங்கு செய்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்றவற்றை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும்பொருட்டு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகிந்தா ராஜபக்சா அரசு தென்னிலங்கை சிங்களவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்முறைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்களும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம், மகிந்தா ராஜபக்சாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரித்தானியாவை தளமாகக்கொண்ட புலம்பெயர் தமிழ் மக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக