04 டிசம்பர் 2010

பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் மகிந்தவை கைது செய்ய உத்தரவு!

மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும்.
முப்பது வருடங்களாக இலங்கை செயற்பட்ட விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சகல மக்களுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சுதந்திரம் பறிபோயிருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக உறுதியாகியிருப்பதாக பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய சட்டத்தின்படி 72 மணித்தியாலங்களுக்கு செயற்படுத்தப்படும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இயங்கும் நோர்வே சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய புலம்பெயர் தமிழர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக