25 டிசம்பர் 2010

சிங்களத்தில் தேசியகீதம் பாடுவதில் தவறில்லையாம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.
அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
அதற்கு மேலாக அவ்வாறு சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எதுவிதமான உள்நோக்கங்களும் இருப்பதாக கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் எதிர்வரும் காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தான் அமைச்சரவையிடம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

  1. அவனது அப்பனின் மொழி அது. எம்மையும் அதற்கு உடன்பட வைக்கப்பார்க்கிறானா இந்த கருங்காலி அடிப்பொடி?

    பதிலளிநீக்கு