07 டிசம்பர் 2010

சிறீலங்கா போர்க்குற்ற விசாரணை..! கனடா தழுவிய ரீதியில் தீவிரமான செயற்பாட்டில் CWVHR

இறுதிப் போரில் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் இடம்பெற்றனவா தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆலோசனை வழங்க ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை அல்லது ஆதாரங்களை டிசம்பர் 15ம் திகதிக்கு முன்பு 10 பக்கங்களுக்கு மேற்படாமல் சமர்ப்பிக்குமாறு இந்தக் குழு கேட்டுள்ளது. தனிப்பட்ட முறையிலோ, அல்லது அமைப்புகளாகவோ நாம் இதைச் செய்ய முடியும்.
இந்நிலையில் மக்களுக்கு நிலைமையை தெளிபடுத்தி போர்க்குற்ற விசாரணை தேவை என்ற வேண்டுகோளை விடுக்கவேண்டிய பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் உதவும் முகமாக போரினால் பாதிக்ப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்(Center for War Victims and Human Rights (CWVHR) கடந்த வாரங்களாக ரொரன்ரோ பெரும்பாகத்தை மையப்படுத்தி தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது.
முடிவுத்திகதி அண்மித்திருக்கும் இந்நிலையில் தனது செயற்பாட்டை கனடா தழுவிய ரீதியில் ஏனைய மாநிலங்களிற்கும் விரிவுபடுத்தியிருக்கிறது. அந்தவகையில் செயற்பாட்டிடங்களும் காலமும் அறியத்தரப்பட்டிருக்கிறது.
அத்துடன் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் தொண்டர்கள் வேண்டப்படுவதாகவும் அறியமுடிகிறது.
ஓன்ராரியோ மாநிலம்.
Scarborough:
Weekdays 7:00 pm to 9:00 pm
Weekends 3:00 pm to 6 :00 pm
Unit # 10 , 5310 Finch Ave E (Finch /Markham )
கியுபெக் மாநிலம்.
07.12.2010 செவ்வாய் முதல் 15.12.2010 வரை தினமும் மாலை 5:00 – 9:00 வரை தலமை அலுவலகம் 1440 Rue Rochan, H4L 0B1, St Laurent
(மெற்றோ கோட்வெட்றூ, புரவிக்கோவிற்கு பின்புறமாக)
10.12.2010 வெள்ளி மாலை 5:00 – 9:00 வரை
மொன்றியல் அருள் மிகு திருமுருகன் ஆலயம்
07.12.2010 செவ்வாய் முதல் 15.12.2010 வரை தினமும் மாலை 5:00 – 9:00 வரை (ஞாயிறு 9:00 மணிதொடக்கம் 4:00 மணிவரை)
இமிகிறேசன் வேர்க்கர்ஸ் சென்றர் 4755 Van Horn 110
12.12. 2010 ஞாயிறு பகல்
தமிழ் கிறிஸ்தவ ஆலயம் 9400 Rue Lajeunesse,H2M 1S4
11.12.2010 சனி, 12.12. 2010 ஞாயிறு மாலை 5:00 மணிதொடக்கம் 9:00 மணிவரை 6830, Parc Ave.
தொடர்புகளுக்கு: 514 400 5331
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான மையம்
உங்கள் சமர்ப்பித்தலை செய்துவிட்டீர்களா? இல்லை என்றால், இப்போதே செய்யுங்கள். என்ற தலைப்பில் மின்னஞ்சல் பரப்புரையையும் மேற்கொண்டு வருகிறது. அதனையும் இங்கு தருகின்றோம்.
அனுப்ப வேண்டிய முகவரி: panelofexpertsregistry@un.org
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் விரும்பின் un@cwvhr.org முகவரிக்கு பிரதி செய்யவும்.
இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. ஆகையால், இலங்கையில் ஒரு முழுமையான, நியாமான, சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று வேண்டியும், எமக்கு நடந்த பாதிப்புகளைக் கூறியும் நாம் எமது சமர்ப்பித்தல்களை செய்வது எமது மனிதபிமானக் கடமை ஆகும்.
பின்வரும் தகவல்களை அல்லது விடயங்களை நிபுணர்குழுவிற்கு அனுப்பும் முறைப்பாடுகளில் சேர்க்கலாம்.
• எப்படி உங்களது அல்லது உங்கள் உறவினரது மனிதஉரிமைகள் மீறப்பட்டன(கொல்லப்படல், ஊனமுறல், காணாமற்போதல், சித்திரவதைசெய்யப்படல், தடுத்துவைக்கப்படல், பாலியல் வன்முறைக்கு உட்படல், வீடு,சொத்துகளை இழத்தல்)
• பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணைக்கான தேவையை வற்புறுத்தல்
• இலங்கையில், பக்கச்சார்பற்ற நீதிவிசாரணை இல்லை, உரிய நட்டஈட்டினை பெறுவதற்கான பொறிமுறைகள் இல்லை
• முறைப்பாட்டை அனுப்பவர் தன்னுடன் தொடர்பு கொள்வதற்கான முகவரியைக் கொடுக்கவேண்டும்.
தனிப்பட்ட தமிழ்மக்களும் தமிழ்அமைப்புகளும் முறைப்பாடுகளைச் செய்தல் அவசியம்.
தயவுசெய்து இதனை உங்களின் முக்கியமான, முதன்மையான கடமை எனக் கருதுங்கள்! இதுபற்றிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். எமது மக்களுக்காக இதைத்தானும் நாம் செய்யவில்லை என்றால், எமது மனச்சாட்சி எம்மை மன்னிக்காது.
மேலதிக தகவல்களுக்கு:
Phone: 416 628 1408
Email: dm@cwvhr.org
www.cwvhr.org/unsubmission/
தகவல் தமிழ் ஊடக மையம் கியுபெக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக