03 டிசம்பர் 2010

பிடியாணை கோரி மனுதாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் நிறைவடைந்த யுத்தத்தின் போது, இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தகுற்றங்கள் தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிய மனு இன்று பிரித்தானியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிரித்தானியாவின் தமிழர் ஒன்றியம் இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அங்குள்ள பல மனித உரிமை அமைப்புகளும் இந்த மனுவில் கைச்சாத்திட்டுள்ளன.
கடந்த 1997ம் ஆண்டு சிலி நாட்டின் சர்வாதிகாரி ஒகஸ்டோ பினோசேயை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்த உயர் மட்ட பிரித்தானிய சட்டத்தரணிகள் குழு, மகிந்தவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரித்தானியாவில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்பார்ப்பாட்டங்களும், இந்த சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக