
சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது.
சீமான், தன் மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை 10ந்தேதி காலை 9.30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார்.
சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர்.
நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக