இலங்கை அரசாங்கம் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க இராஜதந்திரிகள் முனைப்பு காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கட் லோஞ்சர் போன்ற ஆயுதங்களை வடகொரியா இலங்கைககு விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கான கொடுப்பனவுகள் சீன வங்கியொன்றின் மூலம் இலங்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அரசாங்கம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்துடனான யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளும் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டதாக பிரபல கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான், சிரயா மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிரிய அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளுக்கு அழிவு மிக்க ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளதாக விக்கலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக