
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மஹிந்தவை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். இது இலங்கைக்கு சார்பான அவரின் கொள்கைகளை எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை அரசைக் காப்பாற்ற பொக்ஸ் முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆனால் இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் மிகவும் அதிகம்.
இலங்கை மீது சுயாதீன விசாரணைகள் அவசியம் என பொக்ஸ் இன் மேலதிகாரியான பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பொக்ஸ் மூன்று தடவை இலங்கைக்குக்கு சென்றுள்ளார். அது தவிர அண்மையில் அவர் இரு முறை அங்கு சென்றுள்ளார். ஆனால் அவரின் மூன்று பயணங்களுக்குமான செலவுகளை இலங்கை அரசே முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது.
மற்றைய இரு பயணங்களுக்குமான செலவுகளை இலங்கை அபிவிருத்தி நிதியம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால் கூகுள் இணையத்தளத்தில் தேடியபோது அவ்வாறான அமைப்பின் தடையம் எவையும் காணப்பட வில்லை.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கு சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு தமிழ் மக்களை சந்திக்கவில்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு வழங்கும் பணத்தில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது சட்டத்தை மீறும் செயலாகும்.
2008 ஆம் ஆண்டும் பொக்ஸ் இவ்வாறான செயலை மேற்கொண்டிருந்தார். அவர் நிழல் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிடம் இருந்து 50,000 ஸ்ரேலிங் பவுண்ஸ்களை பெற்றிருந்ததாக த ரைம்ஸ் என்ற ஊடகம் தெவித்திருந்தது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக