02 டிசம்பர் 2010

கேணல் ரமேஷை சிங்களப்படை விசாரிப்பது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளிவரவுள்ளதாக பரபரப்பு தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்தளபதிகளில் ஒருவரான ரமேஷ் அவர்கள் உட்பட முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன்,சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவன் அவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாக முன்பு செய்திகள் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்த உண்மை.
ஆனால் பிரித்தானியாவின் ரெலிகிராப் மற்றும் இன்டிபென்டன் ஆகிய பத்திரிகைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையணியின் தளபதிகளில் ஒருவராக ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த போது ராணுவத்தினரால் விசாரிக்கப்படும் காணொளியை வெளியிடவுள்ளதாக ஈழதேசம் அறிவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் காணொளி வெளிவரும் பட்சத்தில் இலங்கை அரசு உலக அளவில் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக