09 டிசம்பர் 2010

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றின் அவசியம் குறித்து வலியுறுத்தும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, அந்த விடயங்களில் ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பதை ஆளுங்கட்சி உறுப்பினர்களே நிரூபிக்க முயல்வதாக குற்றம் சாட்டுகின்றார்.
தற்போதைக்கு ஜனாதிபதியைச் சூழ்ந்துள்ள அவ்வாறான மந்த புத்தியுள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால் மிக விரைவில் ஜனாதிபதி சர்வதேச விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
அவ்வாறான ஒரு இக்கட்டுக்கு முகம் கொடுக்க விடாமல் பாதுகாப்பது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையிலிருந்து விடுபட வேண்டுமானால் அவ்வாறான சர்வதேச விசாரணையொன்றுக்கு இடமளிப்பதுடன், ஒத்துழைப்பை நல்கவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதற்குப் பதிலாக ஜனாதிபதி தன்னுடைய ஆலோசகர்களின் முட்டாள்தனமான அறிவுரைகளின் பிரகாரம் தான்தோன்றித்தனமாக தொடர்ந்தும் செயற்பட முனைந்தால் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிக்க ஆண்டவனால் கூட முடியாது போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக