13 டிசம்பர் 2010

பெங்களூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் இலங்கை அமைச்சர்!

இந்தியா பெங்களுரில் இடம்பெறும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் பங்கேற்பதற்காக சென்ற இலங்கையின் தேசிய வைத்தியதுறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்க திருப்பியனுப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கோவையில் இடம்பெற்ற புடைவைக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது எதிர்பார்ப்பாட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெங்களுர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் தேசிய வைத்திய அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கலந்து கொள்ளவிருந்தார்.
இதனையறித்த கர்நாடக தமிழ் அமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களுர் எம்.ஜீ.வீதியில் உள்ள காந்தி சிலை முன்பாக திரண்டு வந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியொன்றையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மருத்துவ முகாமுக்கு செல்லாமல் திரும்பிச் சென்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக