12 டிசம்பர் 2010

லண்டனிலிருந்து மயிரிழையில் தப்பிய சிங்கள படையதிகாரி!

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், சிறீலங்கா அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாகி கலகே கைது செய்யப்படும் நிலையில் இருந்து சில மணிநேரங்களில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
டிசம்பர் 3 ஆம் நாள் பிரித்தானியாவின் முன்னாள் உள்த்துறை அமைச்சர் ஜோன் ரையன் என்பவர் உலகத் தமிழர் பேரவையின் சார்பில் வெஸ்ற்மினிஸ்ரர் மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் ஜெனரல் சாகி கலகே மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உலகத் தமிழர் பேரவையின் சார்பில் குயின்ஸ் சட்ட நிறுவனத்தை சேர்ந்த மன்ஜிற் கில் என்பவர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
இதனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் சாகி கலகே எங்கு தங்கியுள்ளார் என கண்டறியுமாறு, நீதிபதி ஸ்கொட்லான்ட்யாட் காவல்த்துறையினரை பணித்திருந்தார். ஆனால் ஸ்கொட்லான்யாட் அவரின் இருப்பிடத்தை அறிய முற்பட்டபோது, அவர் அதற்கு முதல்நாள் இரவு 11.10 மணிக்கு நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்காதுபோனதே கைது அனுமதிப்பத்திரத்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் கருத்தில் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக