இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது, வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.மன்மோகன் சிங்,பிரணாப் முகர்ஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் திருமுருகன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக