02 பிப்ரவரி 2013

ஏ9 வீதியில் மாத்திரம் முப்பது இராணுவ முகாம்கள்!

ஏ9 வீதியில் மாத்திரம் முப்பது இராணுவ முகாம்கள் இருக்கிறது !ஏ9 பிரதான வீதியில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதியில் மாத்திரம் 30 இராணுவ படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படை முகாம்களும் உள்ளடங்குகின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் தேசத்தில் இராணுவமுகாங்களின் ஆதிக்கம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் பொழுது:
பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 806 ஏக்கர் நிலப்பரப்பில் 10 படைமுகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரம் படையினர் வரை நிலைகொண்டுள்ளனர். வவுனியாவில் சென்.ஜோசப் படை முகாம், மாந்தை படை முகாம், தாண்டிக்குளத்தில் 56 ஆவது ரெஜிமென்ட், புளியங்குளத்தில் விசேட படைப்பிரிவு, குருசிடம் குளத்தில் விசேட படைப்பிரிவு, கனகராயன் குளத்தில் 19 ஆவது கஜபாகு ரெஜிமென்ட், கனகராயன் குளத்தில் 561 ஆவது ரெஜிமென்ட், கனகராயன் குளத்தில் 19 ஆவது இலங்கை படைப் பிரிவு, பெரிய குளத்தில் விசேட படைப் பிரிவு முதலிய படைமுகாங்கள் உள்ளன.
மாங்குளதில் 574 ஆவது ரெஜிமென்ட், மாங்குளத்தில் 53 ஆவது ரெஜிமென்ட், கொக்காவிலில் 632 ஆவது ரெஜிமென்ட், அறிவியல்நகரில் விசேட படைப்பிரிவு , இரணைமடுவில் தகவல் படைப்பிரிவு, கிளிநொச்சியில் 571ஆவது ரெஜிமென்ட் முதலிய படைமுகாங்கள் உள்ளன. ஆனையிறவு, மாஞ்சோலை, புலோப்பளை, பளை, முகமாலை, எழுதுமட்டுவாள், வரணி, நுணாவில், நணாவில் மத்தியில் படைத்தளங்களும், மிருசுவிலில் கெமுனுபடைப்பிரிவும், கைதடியில் 3 ஆவது ரெஜிமென்ட், கைதடியில் 52 ஆவது படைப்பிரிவு, கைதடியில் 523 ஆவது படைத் தலைமையகமும் அமைந்துள்ளன.
இந்த இராணுவமுகாங்கள் முழுவதும் மக்களுக்குச் சொந்தமான காணிகளிலும் பொது இடங்களிலுமே அமைக்கப்பட்டுள்ளன. போர் முடிந்து மூன்று வருடங்களாகிய பொழுதும் இன்னும் இவை அகற்றப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக