08 பிப்ரவரி 2013

“மகிந்தவை அனுமதித்தால்..” அதிகாரிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்!

india-policeஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்று திருப்பதி வருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலகத்துக்கு இன்று காலை 6 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரக்கூடாது. மீறி வந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இது குறித்து இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போனில் வந்த மிரட்டலையொட்டி திருப்பதி கோவில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக