தமிழர்களின் சுயாட்சி உரிமையை நிராகரித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திருகோணமலையில் நிகழ்த்திய உரைக்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் 65வது சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழர்களின் சுயாட்சி உரிமைக் கோரிக்கையை மனதில் கொண்டே, அதை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிறிலங்காவில் அனைத்து சமூகங்களுக்கும் சமமான உரிமை உள்ளது என்றும் இன,மொழி ரீதியான எந்தப் பிரிவினைக்கும் இடமில்லை என்றும் சிறிலங்கா அதிபர் தனது நேற்றைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனச்சிக்கலுக்கு தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்குவதன் மூலம் தீர்வு காணும் முயற்சியை அவர் நிராகரித்துள்ளதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏபி,ஏவ்பி போன்ற செய்தி நிறுவனங்களும், இந்தியாவின் முக்கியமான ஆங்கில நாளேடுகளும், நியுயோர்க் ரைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க நாளேடுகளும், சிறிலங்கா அதிபரின் சுயாட்சி மறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக