05 பிப்ரவரி 2013

அவுஸ்திரேலியா-சிறீலங்கா உடன்படிக்கைக்கு ஐ.நா.கண்டனம்!

அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி அதன் கடற்பரப்புக்குள் நுழையும் எந்த ஒரு அகதிகள் படகையும் அகதிக் கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பை நடத்தாமல் தடுப்பதற்காக இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அகதிகள் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் நிழல் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வரும் படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினரின் உதவிப் பெற்றுக்கொள்ளப்படும்.
அத்துடன் குறித்த அகதிப்படகுகள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது அவுஸ்திரேலிய சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையாது என்று மொரிசன் தெரிவித்துள்ளார். ஏனெனில் அகதிகள் சாசனம், மேலதிக எல்லைகள் அதிகாரத்தை கொண்டிக்கவில்லை என்றும் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், தமது அறிக்கையில், அகதிக்கோரிக்கையுடன் வரும் எந்த ஒரு ஆளையும் கடலில் வைத்து எவ்வித காரணங்களையும் கருத்திற்கொள்ளாமல், திருப்பியனுப்புவது, சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறுவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான எந்த ஒரு முயற்சியும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவே அமையும் என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய அகதி சட்டத்தின்படி,அவுஸ்திரேலியா, தமது கடற்பரப்புக்கு வரும் எந்த ஒரு படகையும் அகதி கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பு இன்றி திருப்பியனுப்பமுடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக