06 பிப்ரவரி 2013

சனல் 4 வெளியிடப் போகும்‘போர் தவிர்ப்பு வலயம்‘

சிறிலங்கா அரசபடைகளால் வன்னியில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் மூன்றாவது காணொளியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விரைவில் வெளியிடவுள்ளது.
ஏற்கனவே ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற பெயரில் முதலாவது காணொளியையும், ‘தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற பெயரில் இரண்டாவது காணொளியையும் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டிருந்தது.
சிறிலங்கா அரசபடைகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தி, அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை எற்படுத்திய சனல் 4 தொலைக்காட்சி, தற்போது மூன்றாவது போர்க்குற்ற காணொளிப் பதிவு ஒன்றையும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
போர் தவிர்ப்பு வலயம் [No Fire Zone - The Killing Fields Of Srilanka] என்ற பெயரில் வெளியிடப்படவுள்ள இந்தக் காணொளியின் முன்னோட்டம் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் விவாதத்துக்கு வர முன்னதாக இந்தக் காணொளி வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக