03 பிப்ரவரி 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளன.
இது குறித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை பிரதிநிதி பெர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து சில உறுப்பு நாடுகள் இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக