
கைது செய்யப்பட்ட நபர் தான் வவுனியா, ஊர்காவற்துறை, யாழ்பப்பாணம் என முன்னுக்கு பின் முரணாக தகவல்களைக் கூறுவதாக தெரிவித்துள்ள படைத்தரப்பினர் இவருக்கு 4 மனைவிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். போலி அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்த சமயம் கைது செய்யப்பட்ட இவரிடம் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜீவன் என்ற இந்த நபர் ஈபீடீபீயின் அடையாள அட்டையை வைத்திருப்பதுடன், ஆவணங்கள் சிலவற்றையும் வைத்திருப்பதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் ஈ,பி,டி,பி,இவர் தமது உறுப்பினர் இல்லை என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக