இலங்கையில் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளும் சகல மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சகல மாணவர்களுக்கும் மூன்று வார காலம் இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாம்களில் வழங்கப்படும் இந்த தலைமைத்துவப் பயிற்சிகளை இராணுவப் பயிற்சியாகக் கருதக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவ மாணவியரின் திறமைகளை விருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கணனி மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக