வடக்கில் இடம்பெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு ஒன்றை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு எடுக்காவிடின் சர்வதேச மனித உரிமை சபைக்கும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கும், சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பகுதிக்குச் செல்லும் நடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சைக்கிளில் செல்பவர்களைக் கூட விட்டுவிடுவதில்லை அவர்களையும் கடும் சோதனைக்கு உட்படுத்தியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
இந்த நிலைமை இருக்க இரவு 9 மணிக்கு ஆயுதங்களுடன் வந்து இனந்தெரியாதோர் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தபால் ஊழியரின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணினியை போடச் சொல்லி அதனை பார்வையிட்டு பின்னர் அவரது மனைவி கூச்சலிடவே அவரது கணவரான தபால் ஊழியர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள்.
வடக்கில் இடம்பெறும் ஆயுததாரிகளின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் என்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக