யாழ்ப்பாண நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு சர்வகட்சி குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் நிலைமைகளை கண்காணிப்பதற்கு சர்வகட்சி உறுப்பினர் குழவொன்று அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாண நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்பபாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாராளுமன்றில் ஒருநாள் ஒதுக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து தாம் கேள்வி எழுப்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்களஸ் தேவானந்தா யாழ்ப்பாண நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாக இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக