யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தேசிய அனர்த்த நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு தனக்கு பணித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
ஆனாலும் தான் முன்னதாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதன்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதாகவும் இரு மொழிகளிலும் பாடப்பட்டாலும் தமிழ்ப் பாரிம்பரிய உடைகளிலேயே மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாட ஏற்பாடு செய்திருந்ததாகவும் இமெல்டா தெரிவித்தார்.
ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுமாறு தனக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் அமைச்சர் என்ற வகையில் அரச உயர்மட்டத்தின் உத்தரவின் பேரிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கக் கூடும் எனவும் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இதனிடையே தற்போது யாழ்ப்பாணததில் சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக இசைவடிவாக ஒலிபரப்பப்படுவதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கு அமைவாகவே இசைக்கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட தேசியகீதத்தின் ஒலிவடிவமே குடாநாட்டின் அண்மைய அனைத்து நிகழ்வுகளிலும் இசைக்கப்படுதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்த கருத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் வெளிவரவில்லை.
இந்த நாய்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தமது சுயநலன்களுக்காக ஒரு இனத்தையே வி்ற்று உண்ணும் விபச்சாரிகள்.
பதிலளிநீக்கு