02 ஜனவரி 2011

சர்வதேச நீதிமன்றத்திற்கு சிங்களவர்?

ஐ.நா. சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு பிரித்தானியாவில் இலங்கைக்கான தூதராக இருக்கும் முன்னாள் நீதியரசர் நிஹால் ஜயசிங்கவே அவ்வாறு நியமிக்கப்படவுள்ளார் என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அலுவலகத்திலிருந்து அவருக்கான பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் (காம்போஜ்) போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் தூதுவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள நிஹால் ஜயசிங்க, இன்னும் இரண்டொரு வாரங்களில் தனது புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக