07 ஜனவரி 2011

புலிகளின் கப்பல்களை பறிமுதல் செய்ய துடிக்கும் சிங்களம்!

தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழிருந்த வரை, அவர்களின் சர்வபலமிக்க படையணியாக விளங்கியது அவர்களின் கப்பல் படை. கடற்புலிகள் தாக்குதலுக்கு அஞ்சி, அந்தப் பகுதியை நெருங்காமல் இருந்து வந்தது சிங்களப் படை. தங்கள் கடற்படைக்கு உதவவும், தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு வரவும் 20 பெரிய கப்பல்களையும் விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர்.
இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்கள் மூலம் சிங்கள கடற்படை விடுதலைப் புலிகளின் கப்பல்களை ஒவ்வொன்றாக குண்டு வீசி அழித்தது. அந்த வகையில் 11 கப்பல்கள் அழிக்கப்பட்டன. ஒரு கப்பலை சிங்கள கடற்படை கைப்பற்றிக் கொண்டது. மீதமுள்ள 8 கப்பல்கள் சிங்கள கடற்படையிடம் பிடிபடவில்லை. தற்போது அந்த 8 கப்பல் களும் சர்வதேச கடல் பகுதியில் இயங்கிக் கொண்டுதான் உள்ளன. இந்த கப்பல்களையும் பறிமுதல் செய்து சொந்தமாக்கிக் கொள்ள சிங்கள அரசு பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது.
ஆனால் அந்த 8 கப்பல்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிங்கள ராணுவ அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த 8 கப்பல்களையும் தற்போதும் விடுதலைப்புலிகள் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இலங்கையிலிருந்து தப்பித்து அகதிகளாக வெளியேறும் மக்களை வெளி நாடுகளுக்கு அழைத்து செல்லும் பணியில் இந்த கப்பல்கள்தான் ஈடுபட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல்களை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற கொறடா திமனஸ்குணவர்தன கூறினார்.
எரித்தீரியாவில் உள்ள புலிகளின் 11 சிறிய போர் விமானங்களைப் பறிமுதல் செய்யவும் இதேபோல நடவடிக்கை எடுத்தது இலங்கை. ஆனால் எரித்தீரியா நிர்வாகம் இலங்கையின் நெருக்கடிகளுக்குப் பணியவில்லை. இலங்கையுடனான தூதரக உறவைக் மறுத்துவிட்டது எரித்தீரியா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக