02 ஜனவரி 2011

போரின் இழப்புக்களை ஆய்வு செய்ய அமெரிக்கா முயற்சி.

புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் பின் வடக்கின் இழப்புகள் குறித்து நேரடி ஆய்வுக்கு உலக வங்கியூடாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பொன்றை நடாத்தி, அதன் மூலம் போரின்போது காயமுற்றவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் உள்ளிட்ட தகவல்களை ஆவணப்படுத்த அமெரிக்கா முயற்சியொன்றை மேற்கொண்டது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அமைச்சரவைக் கலந்துரையாடலின் போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
வடக்கில் அவ்வாறான கருத்துக் கணிப்பொன்று நடத்தப்படும் பட்சத்தில் அங்கு போரினால் இறந்த மக்கள், காணாமல் போன மக்கள், காயம்பட்ட மக்கள் உட்பட பாதிப்புக்குள்ளான மக்கள் தொடர்பிலான விடயங்கள் ஆவணப்படுத்தப்படும் பட்சத்தில் அது அரசாங்கத்துக்கு எதிரானதாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமே அதற்கான காரணம் என்று அறியப்படுகின்றது.
ஆயினும் வடக்கு மக்களின் பாதிப்புகளின் நிலவரம் தொடர்பிலான ஆய்வுகளை வேறு அமைப்புகளின் ஊடாக இராஜதந்திரிகர்களின் முயற்சியால் முன்னெடுக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக