இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்றைய தினம் விவாதம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் துணைக்குழுவினால் இன்றைய தினம் விவாதம் நடத்தப்படுகின்றது.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி சர்வதேச அனர்த்தக் குழு இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எழுத்து மூலம் பதிலளித்திருந்தது. குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ரிவன்த ஆரியசிங்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அனர்த்தக் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக