புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் நடந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’எந்த இடத்திலும் என்னை பேச அனுமதி மறுக்கிறது அரசு. அதனால்தான் இது போன்ற இடங்களில் பேசுகிறேன். தமிழ்நாடு தமிழனுக்கு சொந்தமில்லை.
முன்பு வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இப்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது.
இந்த இழிநிலையை போக்கத்தான் நாம் தமிழர் கட்சி என்ற புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். அண்ணனின் ஆயுத புரட்சிக்கு சற்று இடைவெளி.இந்த இடைவெளியில் அரசியல் புரட்சிதான் எங்கள் பணி. அண்ணன் பிரபாகரனின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாக்களைப் போல எங்கள் தம்பிகள் இருக்கிறார்கள்.
சிங்களனை உறங்கவிடமாட்டோம். பிரிந்து செல்வது என்பது பிறப்புரிமை. இதை அடக்குவது பாசிச கொடுமை. விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும்’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக