05 ஜனவரி 2011

இலங்கை தொடர்பில் விசேட கவனம்!

பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே பிரித்தானிய அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆலோசகர் ரிச்சர்ட் மில்ஸ், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பி தகவலை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தேர்தலுக்காக தமிழர்களின் மனதை வென்றெடுப்பது முக்கியமானது எனவும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஆதரவு குறைந்து காணப்படுகிறது எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சில் இலங்கை விடயங்களை கவனிக்கும் குழுவின் தலைவர் டிம் வொயிட் தெரிவித்தாக ரிச்சர்ட் மில்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் சுமார் 3 லட்சம் தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாகவே டேவிட் மில்லிபேண்ட் தனது பதவிகாலத்தில் 60 வீதமான காலப்பகுதியை இலங்கை தொடர்பில் தேடுவதற்காகவும் தமிழ் மக்களுக்காக பேசவும் செலவிட்டுள்ளார் எனவும் மில்ஸ் தனது தகவலில் கூறியுள்ளார்.பிரித்தானிய தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலர் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் என்பபன காரணமாகவே பிரித்தானியா இலங்கை பிரச்சினையில் அதிகம் கரிசனை காட்டுகிறது மில்ஸ் எழுதியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கை எதிரான யோசனைக்கு பிரித்தானிய முழு ஆதரவை வழங்கவிருந்தது. தமிழ் மக்களின் மனதை வெல்வதற்காகவே பிரித்தானிய யோசனையை ஆதரிக்க தீர்மானித்தது எனவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக