இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி, லங்கா எவ்ரிதிங் என்ற சிங்கள இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரின் அமெரிக்காவுக்கான பயணத்தை பாதுகாப்பு அமைச்சு ரகசியமாக பேணி வருகிறது.
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு லண்டனில் ஏற்பட்ட நிலைமை, பாதுகாப்பு செயலாளருக்கும் ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த பயணம் இரகசியமாக பேணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாலஸ்தீனியர்களுக்கு தனிப்பட்ட நாடு ஒன்று தேவை இல்லை என அவர் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றின் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக