திருகோணமலையின் நகரை அண்மித்த நோத் குறொஸ் வீதி, காபர் றோட், பெரியகடைப் பக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று திடிரெனச் சென்ற கடற்படையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளை படம் பிடித்ததுடன் வீடுகளின் உரிமையாளர்களின் விபரம், காணி உறுதிகள், குடியிருப்போரின் விபரங்கள் என்பவற்றை பெற்றுச் சென்றதாக திருமலை பிரதேசத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பகுதியில் வசிக்கும் சில வீட்டு உரிமையாளர்களிடம் குறித்த பிரதேசத்தில் இருந்து வேறு இடம் செல்வதற்கு தயாராக இருக்குமாறு சில கடற்படைச் சிப்பாய்கள் அறிவுறுத்தியதாக தெரிய வருகிறது.
எனினும் இந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற கடற்படையினர் உத்தியோகபூர்வமாக குடியிருப்பாளர்கள் வேறுபகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்களா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை
இதே போல் சைனாபே, பிரதேசத்திற்கும் இன்று திடிரெனச் சென்ற கடற்படையினர் தமிழ் மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களைப் படம் எடுத்ததுடன் குடியிருப்பாளர்கள் விபரங்கள், உடைமையாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திரட்டிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையிகரின் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச மக்கள் பெரும் பதட்டத்துடனும் தமது சொந்த இடங்களை விட்டு வெறு இடங்களுக்கு துரத்தி விடுவார்களோ என்ற அச்சத்துடனும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
எனினும் இதுகுறித்து திருமலை அரசாங்க நிர்வாக மட்டங்களில் தமக்கு எதுவுமே தெரியாது எனத் தெரிவிக்கும் சில அதிகாரிகள் யாவும் திருமலை அரச அதிபரான படை அதிகாரிக்கே வெளிச்சம் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக