மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை மீறப்பட்டு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக 2013ம் ஆண்டுக்கான நாடுகளின் மனித உரிமை நிலைமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னமும் தீர்வுகளை வழங்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதனை அரசாங்கம் விரிவாக விளக்க வேண்டுமெனவும் தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காது சுயலாபங்களை முன்னிலைப்படுத்தி கடயைமாற்றி வருவதாகவும் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக