அரசாங்கம், தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுதக் கடத்தல்காரர் குமரன் பத்மநாதனை நம்பிச் செயற்படக்கூடாது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, எச்சரித்துள்ளார்.
கே பி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பிலான விசாரணைகளை தவறான வழியில் இட்டுச்செல்லக்கூடும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கே பியை கைதுசெய்து பல மாதங்கள் சென்றுள்ள போதும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
பல்லாயிரக்கணக்கான படைவீரர்களின் சாவுக்கு காரணமாக இருந்த ஒருவரை சிறையில் அடைக்காது, அரசாங்கம், அவருடன் இணைந்து செயற்படுவது வெட்கப்படவேண்டிய விடயம் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கே பி பெருந்தொகை பணத்தை தம்வசம் வைத்துள்ளார். எனினும் இதற்காக அரசாங்கம் அவரை கைதுசெய்திருக்க வேண்டும். யுத்த வீரர்களான பல பிரிகேடியர்களும் ஜெனரல்களும் சிறையில் உள்ள நிலையில் பயங்கரவாதிகள் சந்தோசமாக இருப்பதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக